பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27 கால்டுவெல்


குளிக்கும் முக்கிய இடமாகக் கொற்கை இருந்தது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். தாலமி, கோலன் நதியின் வடக்கே கொற்கை உள்ளது என்று கூறுகிறார். கன்னியாகுமரியைச் சுற்றி வந்த கிரேக்கர்கள் வந்து இறங்கிய முதல் துறைமுகப்பட்டினமும் திருநெல்வேலிக் கடற்கரையிலுள்ள இடமென்று முதன்முதல் குறிக்கப்பட்ட இடமும் கொற்கையே ஆகும். மன்னார் குடாக் கடல் கொற்கையின் பெயராலேயே ‘கொற்கைக்குடா’ என்று கிரேக்கர்களால் வழங்கப்பட்டதிலிருந்து இது மிக முக்கிய இடமெனக் கருதப்பட்டு வந்தமை தெரிகிறது. பெண்டிங்கர் அட்டவணையில் கோல்லிஸ் இண்டோரம், இந்தியாவின் கோல்ஸிஸ் (Colcis) என்று குறிப்பிட்டார்கள். இதற்குக் காரணம், கருங்கடலிலுள்ள பழக்கப்பட்ட கோல்ஸிஸினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதே. தமிழிலும் கிரேக்க மொழியிலும் ‘கொற்கை’ என்னும் இடப்பெயர், ஒரே உச்சரிப்பை உடையதாகவே இருக்கிறது. ‘கொல்கை’ என்பதில் இன்னோசையின் பொருட்டுக் கொற்கை என்று ‘ல’ கரத்திற்குப் பதில் ‘ற’ கரமிட்டு உச்சரிக்கிறார்கள் (புணர்ச்சி விதியும் - ந.ச.). ஆனால் மேற்குக் கடற்கரையில் அதைக் கொல்கை என்றே வழங்குகிறார்கள். திருச்செந்தூர் கோவிலிலுள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் கொல்கை என்றே செதுக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். இந்த இடம் மூன்று அல்லது நான்கு மைல் கடலிலிருந்து உட்புறத்திலிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இப்பட்டினம் கடற்கரையிலேயே இருந்தது; அதற்கு முன் காலத்திலும் கடற்கரையிலேயே இருந்தது என்பதற்கான பல சான்றுகள் இருக்கின்றன. இது ஒரு காலத்தில் முத்து வாணிபத் தலைநகராயும், நகராட்சியில் தலைமையிடமாயும் இருந்தது என்பதைத் தெற்கில் இதன் அருகே எஞ்சி இருக்கும் மக்களிடமிருந்து தெரிந்து கொண்டேன் (களப்பணி ஆய்வுக்கும் கால்டுவெல் வழிகாட்டி! - ந.ச.). பிறகு கடல் கொல்கையிலிருந்து விலகித் தள்ளி வந்தபோது கடற்கரையும் நாளடைவில் உயர்ந்து வந்ததால், கடலுக்கும் கொல்கைக்கும் இடையே ஒரு புதிய வாணிப நகரம் ஏற்பட்டது. இது இடைக் காலத்தில் மிக்க புகழ்பெற்ற இடமாய் விளங்கியது. இதுதான் காயல் என்பது. கொல்காய் என்பதும் கொல்கை என்பதும் ஒன்றே என்பதை உணர்ந்து கொண்டால்தான் மேற்கொண்டு அவற்றின் ஒற்றுமையைப் பற்றி நாம் அறிய இயலும். ‘கொல்’ என்பதற்குத் தமிழில் ‘கொலை செய்’ என்பது பொருள் ‘கை’ என்பது கரம். எனவே கொல்கை என்பது கொலை செய்யும் கை எனப் பொருள்படும் (தவறான பொருள் - ந.ச.). சேனைக்கு அரசாளுபவரின் முதல் ஆயுதமாக நாகரிகமற்ற காலத்திலிருந்த இலக்கியப் பெயர் கொலை செய்யும் கை என்பது; கை