பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/360

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 352


தாக்குதல்களைப் பாதையிலிருந்து எதிர்ப்பதற்கு நான்கு துப்பாக்கி வீரர்கள் தேவைப்பட்டனர். இந்த இடத்தில் அவர்கள் மிக உறுதியுடன் போராடினர். பகைவர் நம்முடைய வீரர் பலரைக் காயப்படுத்தினர்; கொன்றனர். எனினும் யாரும் எதிர்க்க முடியாதவாறு வீரத்துடன் நம் வீரர்கள் போரிட்டதால் முடிவில் அவர்களுடைய எதிரிகள் தப்பி ஓடி விட்டனர். (வீரமா? பீரங்கிப் பலமா? எது காரணம்? - ந.ச.) நெருக்கமாகப் பின் தொடர்ந்து விரட்டிச் செல்லாத எல்லா நேரங்களிலும் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் இழுத்துச் செல்லும் பழக்கம் அவர்களுக்கு என்றும் இருந்தமையால், (அடபாவி! அதுகூட உங்களுக்கு இல்லையா? - ந.ச.) சுற்றுப்புறக் காடுகளில் தோய்ந்திருந்த இரத்தக்கரையை நோக்கி, அவர்களுடைய இழப்பு அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எங்களுக்கு ஏற்பட்ட இழப்பும் அதிகமே. (ஓ! அப்படியா! - ந.ச.) ஆனால் அந்தக் கரை முற்றுகை விடப்பட்டு, கைப்பற்றப்பட்ட பின் வேறெவ்வித எதிர்ப்புமின்றி எங்கள் வேலை தொடர்ந்தது. மாலைக்குள் 236 மூவடி (கெஜம்) நீளமுள்ள பாதையை அமைத்தோம்.

ஆகஸ்டு 7. கொள்ளைக்காகத் தேடிச் சென்ற படைப் பகுதித் தலைவன் டால்ரிம்பிள் (Dalrymple) படை அதிகப்படியான வைக்கோலைக் கைப்பற்றி வந்தது (!-ந.ச.) படைத்தலைவன் எம்லியாட் (Major M'Leed) தலைமையில் வந்த படை ஒரு மணிக்கு மேலாகத் துப்பாக்கி வெடித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு, படைத் தலைவன் ‘லிட்டில்’ (Little) ஒரு பகுதிப்படையினருடன் புண்பட்டவரைக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டான். ஆனால் அவனோ பக்கக் கரையைத் தவிர வேறு எதுவும் யாரும் கடுமையாகப் புண்படவில்லை என்ற மன நிறைவான கண்டுபிடிப்போடு வந்து சேர்ந்தான். ஆனால் எதிரிகளோ அவர்களது துப்பாக்கிகளைக் கைப்பற்றிச் சென்றதில் வெற்றி கண்டதன்றிப் புண்பட்டவர்களையும் கொல்லப் பட்டவர்களையும் கூட இழுத்துச் சென்றுவிட்டனர். (ஓ! அது வியப்போ? பெருமைதானே?!-ந.ச.) காடு மிக அடர்த்தியாக இருந்தமையால் படைத்தலைவன் ‘கிங்’ (King) தலைமையில் வந்த ஒரே ஒரு படை மட்டும் புறப்பக்கப் படையைக் குறிப்பிட்ட காலத்தில் அடைந்தது. படைத் தலைவன் எம்பர்சன் (Major M'Pherson) தலைமையில் எதிர்த் திசையில் அனுப்பப்பட்ட மற்றொரு பிரிவினர் சிறிது நேரம் வரை வந்து சேரவேயில்லை. ஒருவேளை அவர்கள் எதிரிகளைத் தாக்கி அடக்கியும் இருக்கலாம். அதற்கு மேல் எத்தகைய எதிர்ப்பும் எங்களுக்கு ஏற்படவில்லை. படைப் பிரிவுகள் 350 மூவடி (கெஜம்) தூரப்பாதையை