பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/361

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

353 கால்டுவெல்

 வெட்டியபின் திரும்பின.

ஆகஸ்டு 8 மேஜர் ஷெப்பர்ட் தலைமையில் சென்ற கொள்ளைப் படைப்பகுதி மேலும் போதுமான அளவு வைக்கோல் கொண்டு வந்தனர். துணைப் படைப்பகுதித் தலைவன் ‘டால்ரிம்பிள் (Dalrymple) தலைமையில் சென்ற பாதுகாப்புப் படை மறுபடியும் கரை கட்டப்பட்டிருப்பதைக் கண்ணுற்றது. அது அரணிடப்பட்டு காக்கப்பட்டிருந்தது. மறுபடியும் வெற்றிகரமாக அது கைப்பற்றப்பட்டது. படைத்தலைவன் பிலெட்சர் (Fletcher) தலைமையில் சென்ற வலப்படை மட்டும் எதிரியைப் புறமுதுகு காட்டவைத்தது. காட்டின் அடர்வு காரணமாக பக்கப்படை தாக்கப்படவில்லை என்பதை அறிந்து பாதையில் அதிர் வெடி வெடித்தனர். ஆனால் அதனால் எதுவும் இழப்பு நேரவில்லை. பாளையக்காரர்கள் பதுங்கிவிட்டனர். அவர்களுடைய நிலையைப் பார்க்கும்போது எங்களுடைய இழப்பு மிகச் சிறியதே ஆகும். காளையார் கோயில் கோட்டைக்கு நாங்கள் இட்ட பாதையிலிருந்த பாதுகாப்புப் படையினரால் இங்கு கோட்டையைத் தெளிவாகக் காண முடிந்தது. அவர்கள் 500 மூவடி தூரம் பாதை அமைத்தபின் திரும்பிவிட்டனர்.

ஆகஸ்டு 9 ஆம் தேதியன்று பாதை அமைக்கும் எங்கள் படை மேஜர் ஷெப்பர்ட் தலைமையில் தாக்குமுறைகளில் மாறுதல்களை உண்டு பண்ணிக் கொண்டு எல்லாத் துப்பாக்கிகளையும் வெடித்தனர். பாதையில் ஒருசில குண்டுகளைப் போட்டனர். இந்தத் திட்டத்தின்படி ஓர் உயிரிழப்புமில்லாமல் கோட்டையைக் கைப்பற்றினார். இத்தகைய வலிமையுள்ள பல இடையூறுகள் காரணமாய் எங்கள் விரைவான வேலை முன்னேறவில்லை. இந்தக் கரை ஏற்கனவே திறந்துவிடப்பட்டு விட்டது. இப்பகுதியைக் கோட்டையைக் காப்பதுபோல் காக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது. மாலைக்குள்ளாகப் படைப்பகுதித் தலைவன் ‘இன்ஸ்’ தலைமையில் வந்த புதுப்படை நாங்கள் அங்கிருந்து வருவதற்குள் வந்து சேர்ந்தது. 300 மனிதர்களும் 3 துப்பாக்கிகளும் சேர்ந்து கொத்தளங் காக்கச் சிறந்த படையாக ஆயிற்று. அது ஒரு 300 மூவடி சதுரமாகும். அதன் தென்பாகம் காளையார்கோயில் கரையின் மேலிருந்தது. அதற்கு அருகில் எங்களால் வெட்ட இயலாத அளவுக்கு மிகப் பெரிய புளியமரம் ஒன்று இருந்தது. இந்தப் புளியமரமே ‘குண்டடிபட்ட புளி’ யாக இருக்கலாம். (இதன் படத்தை என்னுடைய ‘மருதிருவர்’ நூலில் பார்க்கலாம். - ந.ச.) அப்புளிய மரத்திலிருந்து சிறுவயலும் காளையார் கோயிலும் தெளிவாகத் தெரிந்தன.

எங்களைத் தாக்குபவர்களை நாங்கள் காண்பது அரிதாயிருக்கலாம்.