பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/363

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

355 கால்டுவெல்

 கடிதத்தைக் கொண்டு செல்ல முன்வந்தான். அக்கடிதத்தை உரியவரிடம் சேர்த்த பின் மேலும் ஐந்து பகோடாக்களை அவன் அவர்களிடமிருந்து பெறுவது என்றும், ஆக மொத்தத்தில் நான்கு பவுன் மதிப்புடைய கூலி அவனுக்குச் சேர வேண்டியது எனவும் ஏற்படாயிற்று. ஆனால் அவன் இருட்டியபின் புறப்பட்டும் கூட, எங்கள் தங்குமிடத்திற்குச் சில மைல் களுக்குள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டான் என்று பிறகு நான் அறிந்தேன்.

செப்டம்பர் 1 ஆம் தேதியன்று வழக்கமான பக்கத்துணையுடன் ஒரு படைப்பகுதி காட்டில் 32 நாட்கள் அரும்பாடு பட்டுச் செய்த பணியை அழிப்பதற்காக அனுப்பப்பட்டது. (ஐயோ! - ந.ச.) அவர்கள் காவல் கோட்டைகளை இடித்தும் அருகிலிருந்த சிறு காடுகளுக்குத் தீமூட்டியும் பாழாக்கினர். வெளிக் காவலுடன் சென்ற அவர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி தங்குமிடத்தை அடைந்தனர்.

பாதுகாப்பின்றி தாக்குதலுக்கு எளிதாய் மேற்கு - வடக்குப்பாதைகள் இருக்கும் என்று உணர்ந்திருந்தமையால் இப்பொழுது அப்படை சுற்று வழியாகப் படையெடுத்துச் செல்லப் புறப்பட்டது.

இச்சமயத்தில், எங்களுடைய பணிகளுக்கெல்லாம் மிகப் பயனுடைய செல்வாக்கை உண்டாக்கிய ஓர் அறிக்கையால் இக்காலம் குறிப்பிடத் தக்கச் சிறப்புப் பெற்றது.

பாளையக்காரப் பண்ணை வரி தண்டல்காரர் மிக்க ஆராய்ச்சியின் பேரில் பாளையத்திற்கு வாரிசைத் தேடிக் கண்டுபிடித்தார். அரசு ஆணையின் பேரில் இந்த ஆளுக்குப் பாசறையிலேயே பெருமளவில் சடங்குகளோடும் விளம்பரத்தோடும் அவன் நாட்டின் தலைவனாக அவனுக்குப் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. அந்தப் பாளையத்தின் சரியான வாரிசினுடைய கடைசி குடும்பத்திலிருந்த உறுப்பினரால் அவன் குழந்தையிலேயே தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளப் பட்டவன். ஆனால் மருதுகள் அவர்களுடைய தொடக்கக் காலத்தில் மிக்க வலிமையுடைய தலைவர்களாக இருந்தமையால் அவன் தன்னுடைய வாரிசுரிமையைப் பெறுவதற்கான நம்பிக்கை எதையும் வளர்த்துக் கொள்ள இயலாத அளவில் இருந்த பாளையக்கார வாரிசு ஆகும். தன்னுடைய எதிர்கால ஆசைகளை எல்லாம் துறந்து உயிர் பிழைக்கத் தப்பி ஓடும்படியான, மிக இக்கட்டான நிலைக்கு நெருக்கப் பட்டான். இப்பொழுது அவனைச் சார்ந்தவர்கள், எப்படியாயினும் அவனுடைய உரிமைகளைப் பெறவேண்டுமென மிக்க ஆர்வத்தோடு அவனை வற்புறுத்தினர். அரசு கூட மிக்க அறிவார்ந்த நீதியுடனும்