பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 358

 எதிரிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். எனவே படைப்பகுதித் தலைவன் அக்னியூ அந்தத் திசையில் ஒரு சிறு படைப் பகுதியை மட்டும் செல்லக் கட்டளையிட்டான். இந்தப் படை, எங்கள் கூடாரத்தில் தங்கியிருப்பவர்களுக்குக் கூட அதன் நடவடிக்கை தெரியாமலிருக்கு மாறு மறைமுகமாய் இரவில் புறப்பட வேண்டுமென்று ஒழுங்கு செய்யப்பட்டது. ஏனெனில் எங்களைச் சூழ்ந்து பல உள்நாட்டவர் இருக்கின்றனர். அவர்களுள் யார் யார் எங்களுக்காக மறைந்து பணி செய் பவர் என்று தெரியாது. (உம் - ந.ச.) ஆனால் அப்படை முன்னேறும் போது யாரும் எச்சரிக்கைக் கொடுக்காமலிருக்க கிராமத்தினூடே செல் வதையும் திறமையுடன் தவிர்த்துவிட வேண்டுமென்பதே அவர்கள் எண்ணமும் - ஏன் - அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையுமாகும். ஆனால் அப்படை எந்த ஒரு சிறு இடையூறையும் கூடச் சந்திக்க வில்லை. ஒரு மாதத்திற்கு முன்னரே முழுமையாகப் பயன்படாத சிறப் பான அந்தப் பாதையின் முடிவிலிருந்து நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அடிக்கடி அதைக் கடந்து வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்த எதிரிகள் வந்த வழிகள், காளையார் கோயில் மதில்சுவர் வரை திறந்து கிடந்தன. சிறிதும் எதிர்பாராத இடத்தில் எங்களுடைய திடீர் தோற்றம் வியப்பையும் குழப்பத்தையும் கொடுத்ததன்றி அந்த இடத்தையே உடனடியாகக் காலி செய்துவிட்டு ஓடவும், அடுத்துள்ள காட்டிற்குள் வேகமாக ஒவ்வொருவரும் ஒடி ஒளிந்து கொள்ளவும் செய்தது. படைப்பகுதித் தலைவன் அக்னியூ சிறிது நேரம் அவருடைய படையெடுப்பின் போது எதிர்ப்பட்ட எண்ணற்ற இடையூறுகளை எண்ணி விக்கித்து நின்றார். .

ஜெனரல் வெல்ஷ் கூறுகிறார்:

படையெடுப்பின்போது வழக்கமானதுப்பாக்கிச் சூடுகளும் அதிகக் குழப்பங்களும் இருந்தன. ஆனால் முதல் தடவையாக பக்கங்களை ஊடறுத்துச் சென்றதால் அதைச் சூழ்ந்திருந்த எண்ணற்ற சிறிய வழிகளின் மூலமாக எதிரிகள் தப்பியோட வேண்டியது இன்றியமை யாததாயிற்று. அவர்கள் கோட்டை, எதிரிகளாகிய எங்கள் கையகப் படுவது உறுதி எனத் தெளிவாக எண்ணியிருக்க வேண்டும். அதுவே அவர்களது எதிர்ப்பை வலி குறையச் செய்திருக்க வேண்டும். உள்ளேயிருந்து காளையார் கோயிலுக்குச் செல்லும் ஒவ்வொரு பாதுகாப்பு இடமும் காலியாயிருந்தது. கோயிலைக் கண்டுபிடித்த பின்னர் எங்கள் காவலாளிகள் சுவர்களின் மேல் இருப்பதைக் கண்டு எங்கள் படைத் தலைவன் வெகுவாக மனநிறைவடைந்தான். அங்கு கூடிய நாங்கள் - ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருந்தோம். தொல்லைகள் நிறைந்த