பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 366

 தவிர்க்க வேண்டியிருந்தது.

அவர்களுடைய நாடறிந்ததீயொழுக்கமும் அவர்கள்நடவடிக்கையின் கொடுமையும் அவர்களைத் திரும்பத் தங்களிடத்திலேயே நிறுத்திக் கொள்ளவேண்டுமென்று நினைப்பவர்களின் மனவெழுச்சியைத் தடுத்து நிறுத்தின.

கம்பெனி அரசின் நீதியை (!-ந.ச.) உணர்த்தி அவர்களிடம் சீர் திருத்தத்தை உண்டாக்குவதற்கான எந்த முயற்சியும் விடப்படவில்லை. ஆனால் அவர்களுடைய இணக்கம் அற்ற மறைந்து வாழும் தன்மை, கலகக்காரர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் முதலியவை படைத் தலைவன் அக்னியூவால் தடை செய்யப்பட்டன. அவர்கள் அரசு பக்தி யுடன் புகலடைவதற்கான உறுதி அளிக்க மறுப்பாராயின் கடந்த அக் டோபரில் எழுதிய கடிதத்தில் விளக்கியிருப்பது போன்ற வன்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

தான் பெற்ற முதிர்ந்த தேர்வாய்வுகளிலிருந்து அவர்களுடைய பரம்பரைப் பண்புகள், துன்பத்தை விளைவிக்கக் கூடிய கொடிய செயல்கள் எல்லாம் அவர்கள் நாடு கடத்தப்பட்டு கப்பலேற்றப் பட வேண்டிய தண்டனைக்குத் தகுதியுடையவை என்பதைத் தலைவன் அக்னியூ உணர்ந்திருந்தான்.

நாங்குநேரியைச் சேர்ந்த எட்டு முக்கிய காவல்காரர்கள் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு தூத்துக்குடியிலிருந்து அனுப்பப்பட்டனர்.

சாணார்கள் இனத்தவரான பழமையான கிராமக் காவல் உரிமை யாளர்களுடைய கடமைகள் இன்றுவரை மிகத் திறம்பட சரிவரச் செய் யப்பட்டு வருகின்றன.

நம்பிக்கைக்குரிய பாளையக்காரர்கள் அவரவர் செய்த கலகங்களுக்கு ஏற்பத் தகுந்த தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த போது, அரசிடம் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொண்ட பாளையக்காரர்களுக்குப் பரிசளிக்க அரசு மறக்கவில்லை.

சிறப்பாக, பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலிருந்த பாளையக்காரர்களுக்கும் கலகக்காரத் தலைவன் பக்கம் சார்ந்துவிடுவார்களென எதிர் பார்க்கப்பட்ட பாளையக்காரர்களுக்கும் கூட அவ்வாறே பரிசளித்தனர்.

மணியாச்சி பாளையக்காரன் கலகக்காரர்களுடன் சேர மறுத்து விட்டதால் (ஓ! அதனால்தான் பின்னாளில் கலெக்டர் ஆஷ் வீர வாஞ்சியால் அதே மணியாச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டான்போலும்!