பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377 கால்டுவெல்


அதிகமாகப் பெற்றிருக்கிறது. மக்கள் தொகை ஏறக்குறைய பதினேழு இலட்சம் ஆகும். ஆனால் மாவட்ட ஆட்சியில் நேரடியாக ஈடுபட்ட ஐரோப்பியர் உள்நாட்டவர் அடங்கிய சிப்பாய்படை ஆணையாளர் களையும் சேர்த்துப்பத்து பேருக்கு அதிகமாக இல்லை. பதினேழு நூறாயிரம் நாட்டு மக்கள் பத்தே ஆங்கிலேயர்கள் தங்களை ஆளும்படி அனுமதித்த வழக்கத்திற்கு மாறான காட்சியை நாங்கள் கண்டோம். (என்ன அவமானம்! - ந.ச.) அல்லது அந்த மக்கள் தங்களை ஆளும்படி விட்டுக் கொடுத்தனர் என்றும் அவர்கள் எங்களுடைய அரசை இதுவரை என்றும் அடைந்திராத சிறந்த ஆட்சியாக உலகத்தில் அந்தக் காலத்தில் சிறப்புடன் விளங்கிய ஆட்சியாக - மிக்க விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டனர் என்றும் சொல்வதே போதுமானதாக இருக்கும். (இந்த நிலையை மாற்ற வந்த காந்தி மகான் வாழ்க! - ந.ச.) இந்த நிகழ்ச்சி ஒரு வியத்தகு செயல் என்றே அழைக்கப்படலாம். ஆனால் எப்படியாயினும் அது ஒரு சிறப்பான சான்றாய் அமைந்தது. எனவே நீதியும், தன்னலமற்ற பொதுத் தொண்டும் நிரம்பிய கட்டுப்பாடான ஒரு ஆட்சி அதிகப்படியான மக்களின் நம்பிக்கையுள்ள இணக்கத்தையும் உலகத்தின் உயர்ந்த ஆட்சியாளர்களின் பாராட்டுகளையும் பெற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக மன்னர்கள் தோன்றினார்கள், முயற்சி செய்தனர்; ஆனால் முற்றுப் பெறச் செய்ய இயலாது மாண்டு மடிந்தனர். அப்படியானால் என்றும் ஆங்கில ஆட்சியே நிலையுள்ளதாயிருக்குமென்று எதிர்பார்க்கலாமா? எனின் ஒரு வேளை முடியாது. 'என்றும்' என்ற சொல் மிக்க வன்மையுடையது. (உண்மை-தன்நெஞ்சேதன்னைச்சுடும்!-நச) ஆனால் நான்எச்சரிக்கையோடு இதைப்பற்றி வருவது உரைக்கலாமென்று எண்ணுகிறேன். அவர்கள் ஆட்சி செய்யும்வரை ஆட்சி செய்யும்படியாக இடமளிக்கப்படுவார்கள். மொத்தத்தில் ஆட்சி செய்யும் காலத்து அல்லது குறைந்த அளவு ஆட்சி செய்யப் பெருமுயற்சி எடுக்கும்போது, இதுவரை அவர்கள் தங்கள் சொந்த நலங்களுக்காக மட்டுமல்ல; அல்லது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருடைய நன்மைகளுக்காக மட்டுமல்ல; ஆனால் நாட்டிலுள்ள எல்லா மக்களின் நன்மைக்காகவே ஆட்சி செய்வார்கள்.

திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் பிரிந்ததைப் பற்றிய குறிப்பு சிவகங்கையுடன் இராமநாதபுரம் சேர்ந்து திருநெல்வேலியின் ஒரு பகுதியாகவே கருதப்படாவிடினும், ஆங்கில ஆட்சியின் கட்டுப்பாடு ஏற் படுத்தப்பட்ட காலத்திலிருந்து 1781 முதல் 1803 வரை நியமிக்கப்பட்ட உரிமை மாற்ற வருவாய்த்துறை மேற்பார்வையாளர் காலம் வரை, ஒரே