பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

379 கால்டுவெல்



இயல் - 10

ஆங்கிலேயரிடம்

நாடு ஒப்படைக்கப்படுவதற்கு முன் திருநெல்வேலியிலிருந்த

இயக்கம் - 1801

பகுதி 1

கிறித்து பணி இயக்கம்

திருநெல்வேலியில் கிறித்து பணி இயக்கம் தொடங்கிய காலம் 1532 என்று குறிக்கப்பட்டுள்ளதெனத் திருநெல்வேலி கடற்கரையில் போர்ச்சுகீசிய குடியேற்ற நாடுகளைப் பற்றிய நம்முடைய குறிப்பில் ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சில பரவர்களும், பரவர்கள் மீனவர்களின் பிரதிநிதிகளும், அவர்களுடைய முகம்மதிய எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் போர்ச்சுகீசியரின் உதவியை நாடி வேண்டுவதற்காகக் கொச்சிக்குச் சென்ற போது, அங்கே கோவா மத குருக்களின் பொதுத்தலைவராக (அதுவரை ஆர்ச் பிஷப்பாகாமல் இருந்த மைக்கேல் வாசு என்பவரால் ஞான நீராட்டு பெற்றனர். அதே மத குரு மற்ற குருக்களுடன் முகமதியர்களைத் துரத்திச் சென்ற கப்பலைத் தொடர்ந்து சென்றார். அந்தப் பணியின் குறிக்கோள் நிறை வேற்றப்பட்டவுடன் பரவர்களின் பிரதிநிதிகள் அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கடற்கரையிலுள்ள எல்லாப் பரவர் களுக்கும் ஞானநீராட்டு செய்யத் தொடங்கினர். பரவர்கள் பிரிவைச் சேர்ந்த எல்லாரும் தங்களை மீட்ட போர்ச்சுகீசியரின் சமயத்தைத் தழு வினர். எனினும் இராமநாதபுரம் கடற்கரையை அடுத்துள்ள கிராமங் களிலிருந்தவர்கள் சிலர் சில காரணங்களுக்காக அப்போதும் அடுத்து வந்த 10 ஆண்டுகள் வரையும் அதாவது சேவியர் காலம் வரையும் ஞான நீராட்டு பெறவில்லை. ஞானநீராட்டு அளிக்கப்பட்டவர்கள் அக்காலத்தில் பொதுவாகக் குமரிக் கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் 30 கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். சற்றொப்பப் போற்றத்தக்க எண்ணிக்கையில் 20 ஆயிரம் மக்கள் இருந்தனர். இந்தக் கிராம மக்கள்