பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 380


கன்னியாகுமரியிலிருந்து இராமேசுவரத் தீவு முனைவரை கடற்கரையோர மாக எல்லா இடங்களிலும் அதைத் தாண்டாது அக்கடற்கரைக்குள்ளாகவே விட்டுவிட்டு பரவலாக அமைந்திருந்த கிராமங்களில் வெவ்வேறு காலங் களில் வாழ்ந்து வந்தனர். அப்பகுதி முதலில் குமரிக் கடற்கரை என்று அழைக்கப்பட்டது. பொதுவாக அங்கு நடைபெறும் புகழ்பெற்ற முத்துக் குளியல் காரணமாக 'முத்துக்குளியல் கடற்கரை' அல்லது 'முத்துக் குளியல்' என்றே தனியாகவும் அழைக்கப்பட்டது. உள்நாட்டிலிருந்த ஒரு கிராமமும் இந்த இயக்கத்தில் இணைந்ததாகத் தெரியவில்லை. மேலும் வாசு தொண்டு செய்துவந்த கடற்கரையிலுள்ள மீனவ கிராமங்களில் அவரது சமய போதனை மக்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை. அவர் பரவர்களின் இரக்கமுள்ள காப்பாளர் என்று விளக்கப்பட்டபோதிலும் சேவியர் அங்கு வருகைதரும் வரையில் அவர்கள் சமய அறிவு சிறிதும் பெறாமலே இருந்ததாகத் தெரிகிறது.

சேவியர்

புகழ் வாய்ந்த சமயத் தலைவர் பிரான்சிஸ் சேவியர். திருநெல்வேலி கடற்கரையிலுள்ள பரவர்களிடையே 1542 ஆம் ஆண்டு இறுதிலே சமய போதனையைத் தொடங்கினார். அங்கு இரண்டு ஆண்டுக் காலமாகப் போதனை செய்து வந்தார். அவர் தனது திட்டமுறையைத் தானே விளக்கியிருக்கிறார். கடற்கரைக்கு அவர் வந்து சேர்ந்தவுடனேயே சமயக்கோட்பாடு, கடவுள் வணக்கம், மரியன்னை பற்றிய வாழ்த்துக்கள், கிறித்துவ வேதத்திலுள்ள பத்துக் கட்டளைகள் முதலியவற்றை இந்நாட்டு மொழியில் மொழி பெயர்த்தார். பின்னர் அந்த மொழி பெயர்ப்பை மனனம் செய்தார். நான்கு திங்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, அவர் கிறித்துவ கிராமமொன்றில் வாழ்ந்து வந்தார். இவ்வாறு இந்நாட்டு மொழி அறிவுபெற்று இளம் உள்நாட்டு மொழி பெயர்ப்பாளர்களுடன் கோவாவில் பயிற்சி பெற்றார். போர்ச்சுகீசு மொழியும் தமிழ் மொழியும் பேசிப் பயின்றார். பின்னர் கிராமங்களில் தன் மதக் கருத்துகளைப் பரப்பத் தொடங்கினார். கையில் மணியுடன் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூட்டத்தைத் திரட்டி அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

இந்து மதத்தின் சார்பும் ஆதரவும் அற்றிருந்த கிழக்குக் கடற்கரை யிலுள்ள பரவர்களும் இதற்கு ஈடான முக்குவர் என்றழைக்கப்பட்டமேற்குக் கடற்கரையிலுள்ள இனமான மீனவர்கள் போன்ற மக்களிடையே, மன வலிமையும் பக்தியுமுடைய சேவியர் இந்தியாவில் வாழ்ந்து வந்த அந்தக் குறுகிய காலம் முழுவதிலும் சாதாரண அடிப்படை வேலைகளையே செய்து வந்தார் என்பதை அறிய வருத்தமாயுள்ளது. அவர் தனது