பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

383 கால்டுவெல்


தண்டனையுடன் விரைவில் விடுதலை பெற்று வந்துவிடலாமென்ற நம்பிக்கை கொண்டிருக்க வேண்டாமென்று கூறுங்கள். ஏனெனில் புன்னைக்காயலுக்கு என்றும் திரும்பி வராத வகையில் அவர்களைத் தடுப்பதற்கான எல்லா வழிகளையும் எனக்கு அளிக்கப்பட்ட சட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துள்ளேன். இந்த நாட்டுக்கு இழிவைத் தேடித் தரும் கூடுதலான பழிச்செயல்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணமான குற்றங்குறைகள் யாவும் இவர்களிடம் மட்டுமே அமைந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகின்றன.

'மறைவாகச் சிலைகள் செய்தும் செதுக்கியும் வருகின்ற தொழிற் சாலைகளைக் கண்டுபிடிக்கத் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். (ஐயே! ஐயோ! - ந.ச.)

பரவர்களின் குற்றங்குறைகளைப் பாராட்டாது அவர்களின் நலனுக்காக உழைத்த சேவியரின் ஒரு முகப்பட்ட ஆர்வத்தை வெல்லக் கூடியது ஒன்றுமில்லை. முந்திய இயல்களில் உள்ள போர்ச்சுக்கீசிய குடியேற்ற நாடுகளைப் பற்றிய குறிப்பில் நமக்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. சிறப்பாக, படகர்கள் அல்லது நாயக்கர்களிடமிருந்து அவருடைய மக்களைக் காக்க எடுத்துக் கொண்டதுணிவு மிக்க முயற்சி களுக்கான விளக்கங்கள் பல உள. அவருடைய இந்தக் கடும் பொறுப்பு அவருக்குப் பின் வந்தவர் மேலும் விழுந்தது. ஏனெனில் அவருக்கு அடுத்தபடியாக வந்த அந்தோணியோ கிரிமினாலிஸ், அவரது மக்கள் படகர்களால் தாக்கப்பட்டபோது தானே அவர்களிடையே புகுந்து அவருடைய மக்களின் கூட்டத்தை மறைத்துக் காப்பாற்றிய போது எதிரிகளின் எரிகணைகளுக்கு இலக்காகி இறந்தார் என்று சொல்லப் படுகிறது. இந்நிகழ்ச்சி மனப்பாறையில் நடந்ததாகச் சிலரால் சொல்லப் படுகிறது. பாம்பனுக்கு அருகிலுள்ள வேதாளி என்ற இடத்தில் நடந்ததாக மற்றவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் முன்னே கண்டவாறு, சேவியர் கடற்கரையை விட்டுச் சென்ற எட்டு ஆண்டுகட்குப் பிறகு 1552-ல் போர்ச்சுகீசியர் புன்னைக்காயலில் தோல்வி கண்டனர் என்ற செய்தியிலிருந்து அந்நிகழ்ச்சி புன்னைக்காயலில் நடந்திருக்கலாம் என்ற தெளிவானநம்பத்தகுந்த கூற்று ஒன்று உளது. குற்றவாளிகள் அவர் களுடைய இயக்கத்தின் முதல் தியாகிகள் என்று ஏசு சபைக்காரர்கள் போற்றினர். உண்மையில் அவர் மக்களைக் காக்கும் பணியில் ஒரு மாபெரும் தியாகிதான். ஆனால் அவர் சார்ந்த மத இயக்கத்திற்குத் தியா கியாக முடியாது. அவர் 1562-ல் இறந்ததாகச் சிலரால் கூறப்படுகிறது.

சேவியருக்குப் பிற்பட்ட காலம்

சேவியருக்கு அடுத்த நூற்றாண்டில் புகழ்வாய்ந்த இராபர்ட் - டி