பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31 கால்டுவெல்


- ந.ச.). கன்னியாகுமரியில் ஏற்கெனவே ஒரு நதி - உண்மையான நதி - புனித நதி - இருந்ததென்றும், அங்கு மக்கள் தீர்த்தமாடினார்கள் என்றும் உள்நாட்டார் செவிவழிச் செய்தியாகக் கூறுகின்றார்கள். ஆனால், இந்த நதி. கடலினால் விழுங்கப்பட்டுவிட்டது. பெரிப்புளூஸில் தெளிவாக எழுதப்பெற்ற செய்தி இல்லாவிடில், இது நம்பப்படலாம். ஆனால் அறிஞரான கிரேக்கரின் வார்த்தைகளுக்குள்ள உண்மையை எதிர்க்கவல்ல எந்த அகநாட்டு (உள்நாட்டு) மரபுவழிக் கதையும் இல்லை. எனவே, பழங்காலத்தில் மக்கள் ஆற்றில் தீர்த்தமாடாமல் கடலிலேயே தீர்த்தமாடினார்கள் என்பது தெளிவு. (கால்டுவெல் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை அறியார்! - ந.ச.). இதைத் தவிரப் பாண்டியனுக்குக் கொடுக்கப்பட்ட பட்டம் இந்த எண்ணத்திற்கு மாறான சான்று தருகிறது. ஏனெனில் ‘சர்ப்பன்’ (‘சர்ப்பன்’ என்பது ‘சேர்ப்பன்’ என்பதன் மரூஉ-ந.ச.) என்பது கடற்கரையைக் குறிக்கின்றது. நதிக்கரையையன்று. ‘குமாரி சர்ப்பன்’ என்பது குமரிக்கடற்கரையின் தலைவன் என்று பொருள்படும். மேலும், கன்னியாகுமரியில் குமரியின் பெயரால் மக்கள் தீர்த்தமாடுவது பரத அரசனின் மகளுக்காக அன்று; குமரி என்றும் வழங்கப்படும் துர்க்காதேவிக்காகவே. கன்னியாகுமரியில் துர்க்கையின் சிறப்புப் பெயர் பகவதி. தனிப்பட்ட ஆதாரங்களினின்றும் ஊகிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படாத செய்திகளுக்கு அகநாட்டு (உள்நாட்டு) மரபுவழிக் கதைகள் எவ்வளவு நம்பிக்கையற்ற செய்திகளைத் தருகின்றன என்பதற்குக் கன்னியாகுமரியைப் பற்றிய இக்கிளைக் கதை ஒரு சான்றாகும் (1. இப்படிப்பட்ட கதைகள் யாரால் - ஏன் - படைக்கப்பட்டன என்பதும் எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்று. 2. கால்டுவெல் போன்றோர் பழந்தமிழ் நூல்களைப் பார்த்தறியா நிலையில் செய்யும் ஆய்வுகளும் சிறுமையுடையனவே! - ந.ச.).

கிரேக்கர்கள் கண்ட பாம்பன்

பாம்பனைப் பற்றிக் கிரேக்கர்கள் கூறியவற்றை இங்கே கூறுவது பொருத்தம் உடையதாகும். பாம்பன் என்பது புகழ் பெற்ற இராமேசுவரக் கோவில் அமைந்துள்ள தீவாகும். ஆனால், பாம்பன் கன்னியாகுமரியைப் போன்று திருநெல்வேலி எல்லையைக் கடந்து இருக்கிறது. கன்னியாகுமரி திருவாங்கூரிலுள்ளது (கால்டுவெல் காலத்தில்! - ந.ச.). மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுர குறுநில மன்னர் ஆட்சியில் (ஜமீந்தாரியில்) உள்ளது பாம்பன். கொரி என்ற தீவு அர்காலின் குடா அல்லது பால்கன் நீரிணைப்பி (ஜலசந்தி) லிருப்பதாகத் தாலமி வருணித்துள்ளார். மற்றோர் இடத்தில் இதை