பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 394


டிற்குப் பிறகு தற்போது தமிழ்நாட்டு மக்கள் யாவராலும் போற்றப் படுகின்ற பெயரைத் தமிழ்நாட்டின் புலவர்கள் அவருக்குக் கொடுத்ததாக நாம் கேள்விப்படுகிறோம். (மறைமலை அடிகளார் முன்னோடிகள் வாழ்க! - ந.ச.) அப்பெயர் வீரமாமுனிவர் என்பது. அதாவது வீரமாமுனிவர், 'அடியவர்களில் சிறந்தவர் என்று பொருள்படும், எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மேதையான ராபர்ட் - டி - நொபிவிக்கு அவரது சமய அறிவுத் திறனுக்குப் பொருத்தமான 'தத்துவ போதகசாமி'- தத்துவ மருத்துவர் என்ற பெயர் நன்றாகப் பொருந்துவது போன்று இந்தப் பெயர் அவருக்கு அவ்வளவு பொருந்தவில்லை. (ஏனோ? - ந.ச.)

அவருடைய வாழ்வின் கடைசிநான்கு ஆண்டுகளில் 1736லிருந்து 1740 வரை, பெஸ்கி சந்தாசாகிபின் திவானாகப் பணியாற்றியதாகத் தெரி கிறது. சந்தா சாகிபு சூழ்ச்சியுடன் திருச்சிராப்பள்ளியைப் பிடித்தது, அதன் காரணமாக மதுரைப் பகுதி முழுவதும் அதிகாரம் பெற்ற செயல் அரசியல் வரலாற்றில் நாயக்க வம்சத்தின் முடிவைக் கொண்டுவந்த நிகழ்ச்சியாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் பேற்றினால் சந்தா சாகிபு நவாபானான். உண்மையில் கர்நாடக நவாபுக்குப் பகையானான். பெஸ்கியின் நாட்டு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்:"பெஸ்கி சந்தாசாகிபை நேரில் கண்டு பேசுவதற்குத் தன்னைத் தகுதியுடையவராக்கிக் கொண்ட மூன்று மாதக் காலத்திற்குள் பெர்சியன், இந்துஸ்தானி முதலிய மொழிகளைக் கற்றார். இந்தப் பயன்களாலும் திறமையினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட சந்தா சாகிபு நான்கு கிராமங்களின் வருமானத்தை அவருக்குப் பரிசாக அளித்ததோடு அவரைத் தன்னுடைய திவான் அல்லது தலைமை அமைச்சராக நியமித்துக் கொண்டான். நான் இந்தக் கூற்றிலடங்கியுள்ள உண்மைக் கூறுகளைப் பற்றி ஐயப்பட எந்தக் காரணமும் காணப்படவில்லை. ஐரோப்பாவுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் 1736 இல் சந்தாசாகிபு - பெஸ்கி சந்திப்பு குறிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இக்கூற்று உறுதிப்படுகின்றது. 1740 இல் அக்காலத்தில் கர்நாடகத்தின் உண்மை நவாபாக இருந்த (தவுத் டவுஸ்ட்) அலிகானை அவர், வேலூருக்குச் சென்று கண்டார். அவர் ஐரோப்பா நாட்டின் புதுமைப் பொருள்களையும் ஏசு சபையின் பொதுத் தலைவர் உரோமாபுரியிலிருந்து 29 அக்டோபர் 1739 என்று தேதியிட்ட நவாபுக்கு எழுதிய ஒரு கடிதத்தையும் அவருக்கு (நவாபுக்கு) கொடுத்தார். சந்தா சாகிபு 1740இல் ராகோஜி பான்ஸ்லே, படாசிஸ் என்ற இரண்டு படைத் தலைவர்களின் கீழ் மராட்டியர்களால் திருச்சிராப் பள்ளியில் முற்றுகையிடப்பட்டான். 1740 மார்ச் மாதத்தில் அவன் கோட்டையை கைவிட்டுச் சரண் அடைந்தான். பின்னர் அவர்களால்