பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 396


தன்னுடைய முடிவையும் அங்கேயே அடைவதற்கு இயல்பாகவே விரும்பி யிருக்கலாம். மேலும், மணப்பாருக்குச் சொந்தமாகிய டச்சுக்காரர்கள் எப்பொழுதும் ஆங்கிலேயரைத் தழுவியிருக்கின்றவர்களை ஏறத்தாழ எதிர்த்துப் போரிடும் நோக்குமுடையவர்கள். ஆகையால் மராட்டியர்களி டமிருந்து தப்பியோடிவந்த சந்தா சாகிபின் நண்பனைத் தங்கள் பாது காப்பில் ஏற்றுக் கொள்ள விரும்பியும் இருக்கலாம். டச்சுக்காரர்கள் பிராட்டஸ்டண்டுகள் என்பது உண்மையே; எனினும் அந்தக் காலத்தில் அவர்கள் பொறுத்துக் கொள்ளும் தன்மையைக் கற்றிருந்தனர். பெஸ்கி இறந்ததாகச் சொல்லப்படும் மணப்பார் என்பது சரியாக மனப்பாறை என்றும் அது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ளது என்றும் சிலரால் கரு தப்படுகிறது. என்றாலும் இக்கருத்துக்குச் சான்றுகள் இல்லை. அந்த இடத்திலுள்ள கத்தோலிக்க கிறித்துவ சமயவாதிகள் உட்பட மணப் பாறை மக்களும், பெஸ்கி திருநெல்வேலியிலுள்ள மனப்பாரில் இறந்தார் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

பெஸ்கி மனப்பாறைக்குச் சென்றபின் நீண்ட நாட்கள் உயிரோடில்லை. அவர் ஏசு சங்கத்தாருடைய மடம் ஒன்றில் தங்கியிருந்து தெய்வீக நிகழ்ச்சிகளுக்கு அறிவுரை கூறுவதிலும் தன்னுடைய நூல்களைத் தெளிவாகத் திருத்தியமைப்பதிலும் தன் நேரத்தைப் போக்கியதாக அவருடைய வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். அவர் இறந்த சரியான தேதி தெரியவில்லை. ஆனால் அவர் 1746 இல்தான் இறந்தார் என்பது உறுதி. கற்றறிந்த மேதையாகிய, ஏன் மிகப் புகழ் பெற்ற தொடக்க காலத்திய மிகப் பெரிய ஏசு சங்க வாதியாகிய பெஸ்கி அவர் களின் தொண்டு இவ்வாறு அமைதியாக முடிவெய்தியது.

மணப்பாரிலுள்ள கிறித்துவக் கோயிலின் கருவறையில் பெஸ்கியைப் புதைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கிறித்துவக் கோயில்களின் மிகப் பழமையான அக்கோயில் இன்று முழுவதும் மணலில் புதைந்துபோயிற்று. அங்கு குறைந்தது பதினைந்து அடி மணலாவது அதன்மேல் இருக்கும். அன்றியும் பெஸ்கியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைக் குறிக்கக் கல்லறைக்கல் எதுவும் நடப்படவில்லை என்றும் கருவறையில் மற்ற சமயத் தொண்டர்களும் புதைக்கப்பட்டார்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். மற்றும் சிலர், இரண்டாவது கோயில் எழுப்பப்பட்டபோது, பழைய கோயில் கருவறையிலிருந்து இரண்டு பகுதி எலும்புகள் எடுக்கப்பட்டன என்றும், அவை பின்னே எழுப்பப்பட்ட கோயில் கருவறையில் புதைக்கப்பட்டன என்றும், ஆனால் அது யாருடையவை என்பதைக் குறிக்க எவ்வித சான்றும் இல்லை என்றும் கூறுகின்றனர். மணப்பாரிலுள்ள மீனவ மக்கள் பெஸ்கி அவ்வளவாகப்