பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

397 கால்டுவெல்


போற்றிப் பாராட்டவில்லை என்பதை யார் ஒருவரும் உறுதியாகக் கூற முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் புதுமைகள் புரியவந்த தொண்டன் என்று புகழ்பெற முயன்றிருந்தாரானால் அவரது கல்லறை கருத்தோடு பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!

பெஸ்கியின் காலத்திற்குப்பின்

பெஸ்கியின் மறைவுக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து உல கெங்கிலுமுள்ள ஏசு சபைத் தொண்டர்களுக்குத் தொல்லைகள் உருவாகத் தொடங்கின. 1755இல் ஐரோப்பாவிலிருந்து ஏசு சபைத் தொண்டர் களுக்குக் கிடைத்த உதவி நின்றுவிட்டன. போப்பாண்டவர் (பாம்பல்) கட்டளைப்படி 1760 இல் கோவாவிலிருந்து ஏசு சபைத் தொண்டர்கள் விசுபனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். திருநெல்வேலியிலுள்ள வடக்கன் குளம், தாழை, மணபார், வீரபாண்டியன்பட்டணம் முதலிய இடங்களில் தங்கியிருந்த ஏசு சங்கத் தொண்டர்கள் ஒருவர்பின் ஒருவராக இறக்கவே, அவர்களுடைய இடத்தைக் கோவாவிலிருந்து வந்த உள்நாட்டு மத குருக்கள் நிரப்பினர். 1733 இல் அப்போது இருந்த ஏழாம் போப் ஆண்டவர் ஏசு சபையை ஒழுங்குமுறைப்படி கலைத்துவிட்டார். 1838 இல் மார்ட்டின் பாதிரியாரும் துரங்குவட் பாதிரியாரும் ஆகிய இரண்டு ஏசு சபைக்காரர்களும் தங்கள் பழமையான சங்கத்தைத் திருநெல்வேலியில் மீண்டும் தொடங்குவதற்குப் பாளையங்கோட்டையில் வந்து இறங்கினர்.

'திருநெல்வேலி எப்பொழுதும் மதுரை ஏசு சபைச் சங்கத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். 1616லிருந்து 1748 வரை ராபர்ட்-டி-நொபிலி, டிபிரிட்டே, பான்செட், ஆர்லாண்டு முதலிய குருமார்கள் பெயர்களோடு தொடர்புடையதாக இருந்த மதுரையின் வரலாறு மிக்க சுவை நிரம்பியது. பின் குறிப்பிடப்பட்ட ஆண்டில் (1748இல்) இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 385000 கிறித்தவர்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. பின்னர் மேலே கூறியதுபோல, ஏசு சபையார்களை ஒடுக்கும் முயற்சி தொடர்ந்தது. அதன் பயனாக, மதுரை சங்கம் அப்போதைக்கு கலைக்கப் பட்டது. 1831 ஆம் ஆண்டிற்குப் பின் மீட்சியும், ஏசு சபையார் மதுரை வருகையும் ஏற்பட்டன. ஏசு சபை புதியதாகத் திரும்ப தொடங்கப்பட்டது - (சுடுவர்ட்டின் திருநெல்வேலி மானுவல் - பக்கம் 62).