பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 398



இயல் - 10

இங்கிலாந்து கோயிலின் சங்கங்கள்

பகுதி - II

ஸ்வார்ட்சு (Swartz)

18 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கு முன் திருநெல்வேலியில் ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அச்சங்கம் செய்யக் கூடிய முன்னேற்றங்களைப் பற்றிய எந்த நல்ல எண்ணத்தையும் உறுதி செய்யக் கூடிய எந்த நிகழ்ச்சியும் ஏற்படவில்லை. முதலில் திருநெல்வேலிச் சங் கம் தஞ்சாவூர் சங்கத்தின் வெறும் கிளையாகவே தோற்றுவிக்கப்பட்டது. இங்கிலாந்து கோயில் சங்கத்தின் தொடர்புடைய திருநெல்வேலித் தொண்டுகளைப் பற்றிய செய்தி முதன் முதலில், திரு. மாணவர்களுக் குரிய (அப்போஸ்தலர்கள்) எளிமையும், தெய்வத் தொண்டும் ஆர்வமும் நிரம்பியவரான புகழ் பெற்ற ஸ்வார்ட்சு நினைவுக் குறிப்புகளில் காணப் படுகிறது. இது 1771 இல் நடைபெற்றது. ஸ்வார்ட்சு அந்த ஆண்டு வெளிவந்த பத்திரிகையில், 'பாளையங்கோட்டை ஒரு கோட்டை. அது திருநெல்வேலியிலுள்ள தலைமையான நகரங்களுள் ஒன்று; நவாபுக்கு உரிமையானது; ஆனால் ஆங்கிலப் பாதுகாப்புப் படையையுடையது' என்று குறிப்பிட்டுள்ளார். அன்று அங்கு ஒருசில கிறித்துவர்கள் இருந்தார்கள் என்று செய்தியைக் குறிப்பிடுகிறார். ஸ்வார்ட்சு முதலில் 1778இல் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தபோது அந்தண விதவை ஒருவரைச் சமய மாற்றம் செய்து திரும்பினார் (எவ்வளவு முக்கியம்! - ந.ச.) 1780 இல் 40 பேர்களடங்கிய பாளையங்கோட்டை கோயில் அடியார் குழு சிறுபட்டியலின் தலைப்பின் அவளுடைய பெயர் (குளோரிண்டா) காணப்படுகிறது. விரைவில் கோட்டைக்குள் ஒரு சிறு கிறித்துவக் கோயிலைத் தானே அமைக்க முயற்சி செய்தாள். பெருந்தன்மையுடைய இரண்டு ஆங்கிலேயர் துணையினால் இச்செயலைச் செவ்வனே செய்து முடித்தாள். (தமிழா! - ந.ச.) திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே எழுப்பப்பட்ட ஆங்கிலக் கோயில் தொடர்புடைய முதல்