பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கைகள்

பிற்சேர்க்கை - 1

திருவாங்கூர் - திருநெல்வேலித் தொடர்புகள்

திருநெல்வேலி திருவாங்கூர் போன்ற அண்டை மாவட்டங்களிடையே இயல்பாகவே வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான உறவுகளும் இருந்திருக்க வேண்டும். ஆயினும் பொதுவாக அத்தகைய உறவுகள் அமைதியுடன் இருந்ததாகத் தோன்றுகிறது. பாண்டிய சோழர் காலத்தில் தமிழ்பேசும் தென் திருவிதாங்கூர் மாவட்டம் நாஞ்சில் நாடு என்றழைக்கப்பட்டது. இத்துடன் புரட்டய நாடும் சேர்ந்திருந்தது. இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரியும் சேர்ந்திருந்தது. இது பாண்டிய பேரரசுக்கு உரியதாக இருந்ததாய்த் தெரிகிறது. பிற்காலத்தில் பாண்டியர் வீழ்ச்சியடைந்த காலத்தில் இந்நிலை எதிர்மாறாக இருந்தது. திருநெல்வேலியின் தென்பாகம் தற்போது திருவாங்கூர் அரசு என்றழைக்கப்படும் நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டும். அப்போது அது பொதுவாகத் திருநெல்வேலியில் வெறும் குடநாடு, மேற்கு அரசு - பொதுவாக மலையாளம் என்று பொருள்படும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த மாறுதல்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டுச் சான்றுகளையுடையன. ஆனால் ஒன்றிலாகினும் இந்த மாறுதல்கள் படை வலிமை கொண்டு செய்யப்பட்டதற்கான சுவடுகளோ மரபுகளோ இல்லை. அப்போதைக்கு வலியுடையவர்க்கு வலியற்றவர் அமைதியாகவே இடமளித்து விட்ட தாகத் தெரிகிறது.

திருநெல்வேலி வரலாறு விளக்கம் பெறுவதற்குத் தேவையான செய்திகளைத் திருநெல்வேலி திருவாங்கூருக்கு இடையே நிலவியிருந்த தொடர்பைப் பற்றிய எடுத்துக் காட்டுகளுடன் அவ்வப்போது ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆயினும் தி.பி. சங்குன்னி மேனனுடைய 'திருவாங்கூர் வரலாறு' என்ற நூலில் திருவாங்கூரைச் சேர்ந்தவர் என்ற நோக்கோடு அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகளையும் நான் கண்டேன். அவற்றையும் இங்கு இணைத்