பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 404


காணும் போது அவருடைய உடல் அங்கு இல்லையே தவிர உள்ளம் அங்கு நிலைத்திருக்கின்றது என்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது. இந்தப் புதிய பணித்துறையை அவர் தொலைவிலிருந்து காண்பதற்கே வாய்ப்புகள் இருந்தன எனினும் அன்றைக்கு அது அவர்களுடைய சிறு நிகழ்ச்சிகள் நிறைந்த நாளாகக் கருதப்பட்டாலும், தெற்கே சென்று தன்னுடைய தொண்டுகளை ஆரம்பித்து அவர் வழிகாட்டியதும், அவர் சென்று அறிமுகமான மாவட்டங்கள் பலவற்றுள்ளும் கிறித்துவம் தழைத்தோங்கக் கூடிய மிகுந்த வாய்ப்புகளுடைய இடம் திருநெல்வேலியே என்ற செய்தியும் இன்று உறுதிப்படுத்தப்பட்டதைக் கண்டு அவர் மகிழ்ந்திருக்க வேண்டும்.

1816லிருந்து 1820 வரை பாளையங்கோட்டை குருவாக இருந்த ரெவரண்டு ஜே.ஹோ என்பவரின் முறையீடுகளாலும் முயற்சிகளாலும் அனுப்பப்பட்ட சுவிசேஷத்தை (Gembel) பரப்புவதற்காக வந்த ஏசு சபைத் தொண்டர்களின் வரலாறும், திருநெல்வேலியிலுள்ள ஏசு சபை கோயிலாரால் செய்யப்பட்ட வாய்ப்புகளாலும் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட ஜேனிக் சபை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

ஆனால் வரலாற்றின் இப்பகுதி 1801 இல் மாநிலம் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்ட தேதிக்கு மிகப் பின்னால் அமைகிறது. ஆனால் அந்தத் தேதியில் இந்த ஆண்டுக் குறிப்புகள் முடிவடைகின்றன.

இப்பொருள் பற்றிக் கூடுதலான செய்திகள் இவ்வாசிரியரின் 'திருநெல்வேலி சபையின் முன் வரலாறு பற்றிய ஆவணங்கள்' என்ற நூலில் காணப்படுகின்றன.