பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

405 கால்டுவெல்


துள்ளேன். சில நிலைகளில் நான் முன்கூறப்பட்ட செய்திகள் அல்லது சான்றுகளுக்கே திரும்பச் செல்வது போல் தோன்றலாம். ஆனால் திருவாங்கூர் வரலாற்றுக் குறிப்புகள் முழுமையாகவும் மிகுதியாகவும் காணப்படுகின்றன.

கல்வெட்டு காட்டும் 15-16 ஆம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலியில் திருவாங்கூர்காரர்களுடைய உடைமைகள்

1. சேரமாதேவி (சேர்மாதேவி) கோயிலின் உட்புறச்சுவரில் மலை யாளம் அல்லது கொல்லம் ஆண்டு 614 (கி.பி.1439) என்ற தேதியுடன் காணப்படும் கல்வெட்டு. சேரமாதேவி அரண் மனையில் திருவாங்கூர் அரசனான சேரன் உதயமார்த்தாண்ட வர்மன் தங்கியிருந்த போது அந்தக் கோயிலுக்கு அளித்த மானியத்தின் நினைவாகப் பொறிக்கப்பட்டது.

2. 644 M.E (மலையாளம் ஆண்டு)

1469 A.D. (கி.பி.) "திருவாங்கூர் அரசனான ஆதித்திய வர்மனால் அளிக்கப்பட்ட மணி" என்று திருக்கண்ணங்குடி (திருகுருங்குடி) கோயில் பெரிய மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் குறிப்பு.

3. 685 மலையாளம் ஆண்டு

1510 (கி.பி) கால்காட்டிலுள்ள வீரபாண்டியன் அரண்மனையில் தங்கியிருந்த போது மார்த்தாண்ட வர்ம மன்னனால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட மானியத்தின் நினைவாக ஏற்பட்டது.

4. 688 மலையாளம் ஆண்டு

கி.பி. 1513 அதே மன்னனாகிய மார்த்தாண்ட வர்மனால் மன்னார் கோயில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலமானியம். அரசனின் மாமன் (uncle) இறந்த அரண்மனையில் விளக்கேற்றத் தேவையான மானியம் அளிக்கப்பட்டதன் நினைவாக ஏற்பட்டது.

5. 707 மலையாளம் ஆண்டு

கி.பி. 1582 திருவாங்கூர் மன்னனான மார்த்தாண்ட வர்மனால் ஆள்வார் திருநெல்வேலிக்கருகேயுள்ள திருக்காலுரிலுள்ள சேர சோழ பாண்டியேசுவரம் என்ற கோயிலுக்கு நிலமானியம் அளிக்கப்பட்டதன் நினைவாக ஏற்பட்டது - சங்குன்னி மேனனது திருவாங்கூர் வரலாறு (பக். 34,35)