பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

407 கால்டுவெல்


'இந்த அரசர் நீண்ட காலம் வாழ்ந்து 78 ஆம் வயதில் 619 மலையாளம் ஆண்டில் (கி.பி.1444) இறந்தார் - பக். 95 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூர் ஆண்டுக் குறிப்புகள் வரலாற்றுப்புகழ் பெற்றன. அதற்கு முன் வரை, அது ஏறத்தாழக் கற்பனைக் குறிப்புகளாயிருந்தன என்பது தெளிவாகின்றது.

'1458லிருந்து 1680 ஆம் ஆண்டிற்கிடையே, சுமார் இரண்டேகால் நூற்றாண்டுவரை, அரசு புரிந்த மன்னர்களின் பெயர்ப்பட்டியல், அரசுரிமை பெற்ற தேதிகள், அவர்களது ஆட்சிக்காலம் - இவைகள் தவிர அந்த மன்னர்களைப் பற்றிய விளக்கமான குறிப்புகள் எதுவும் காணப் படவில்லை.

அக்காலத்தில் திருச்சிராப்பள்ளியில் தலைமையிடத்தை அமைத்திருந்த மதுரை நாயக்கரிடம் உதவிக்காக விண்ணப்பித்தல்

'எட்டு வீட்டில் பிள்ளைமாரும் மாதம்பிமாரும் சேர்ந்து தனது மரு மகனுக்குச் செய்த தொல்லைகளையும் துன்பங்களையும் மன்னன் கூர்ந்து கவனித்து வந்தார். அவர்களுடைய உண்மையற்ற தன்மைக்கும், கலகம் செய்கின்ற நடத்தைக்கும் தண்டிக்க வேண்டுமென உறுதி கொண்டார். அரசன், அவனுடைய அறிவுமிக்க மருகனுடன் கலந்து மாநில அதிகாரிகள் சிலருடன் மலையாளம் ஆண்டு 901 (கி.பி. 1726ல்) திருச் சிக்குப் புறப்பட்டுச் சென்றார். மதுரை அரசினரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு அந்த அரசிடம் விடுபட்டிருந்த தொடர்பைப் புதுப்பித்து அதை உறுதிப்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு தோறும் செலுத்துவதாகவும் கூறி அவர்களுடைய உதவியைப் பெற்றான். அதே சமயத்தில் மாதம்பிமாரையும், மற்ற கலகக்காரத் தலைவர்களையும் தண்டித்து புத்தி புகட்ட ஒரு தகுதிவாய்ந்த படையை அனுப்பும்படி விண்ணப்பித்தார். சிறிது விவாதத்திற்கும், அடிப்படை விசாரணைகளுக்கும் பிறகு, மு. வெங்கடபதி நாயக்கன் தலைமையில் ஓராயிரம் குதிரை வீரரடங்கிய குதிரைப்படையையும் இராகளவியன், சுப்ப ஐயன், அவர்களது குழு உட்பட மற்றவர்களை 50 சிரஸ்தார்க் (சர்தார்கள் (அ) தலைவர்கள்) பொறுப்பில் அனுப்பப்பட்ட படையைப் பெறுவதில் மன்னன் வெற்றி கண்டான்.

திருவாங்கூரில் இப்படை வந்து சேர்ந்தவுடன் மாதம்பிமார் அனைவரும் மற்ற மாறுபாடு கொண்ட படைத் தலைவர்களும் கிளர்ச்சிக்காரர்களும் ஓடிவிட்டனர். அதன் விளைவாக படைக்கு வேலையில்லாது போயிற்று எனினும் அப்படை கிளர்ச்சிக்காரர்களை அச்சுறுத்துவதற்காக