பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 408


நிறுத்தி வைக்கப்பட்டது. (வரலாறு பக். 109).

காலஞ்சென்ற இராமவர்ம மன்னன் (மலையாளம் ஆண்டு 901இல்) பாண்டியரது (நாயகர்) தலைநகருக்குச் (திருச்சிராப்பள்ளி) செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அங்கு பாண்டிய அரசுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு, அதன் வாயிலாக ரூ.3,000 மதிப்புள்ள திறைப் பணத்தை ஆண்டுதோறும் செலுத்துவதாக உறுதி கூறி, குழப்பமிக்க படைத் தலைவர்களையும் பிரபுக்க (robles)ளையும் ஒடுக்குவதற்காக ஆயிரம் குதிரைவீரரும் இரண்டாயிரம் காலாட் படையும் கொண்ட படையை ஆளுநரிடமிருந்து அவர் பெற்றார்.

திருச்சிராப்பள்ளி துணைப்படை

இத்துணைப்படைக்குத் தேவையான ஊதியமும், ஆண்டுத் திறைப் பணமும், சில மாதங்களாகச் செலுத்தப்படாதிருந்தது. மகாராஜா அரசுரிமை ஏற்றபொழுது படைக்கான ஊதியத்தையும் திறைப் பணத்தையும் கேட்டபோது தனது தளவாய் ஆறுமுகப் பிள்ளையைக் கேட்குமாறு பணித்தார். தளவாயோ, பணம் செலுத்தக் காலந்தாழ்தின மையால் படைகள் முற்றுகையிட்டுத் திருக்கண்ணங்குடிக்கு அகற்றப் பட்டார். அதற்குப் பிறகு அவர் கோட்டாறு வணிகர்கள், மற்றவர்களிடம் பணத்தைக் கடனாகப் பெற்று நெருங்கிவந்த தேவைகளின் (demands) பெரும்பகுதியைச் சரிகட்டினார். எனினும் தளவாய் திருக் கண்ணங்குடியிலேயே படைகளால் நிறுத்தி வைக்கப்பட்டார்.

இவ்வேளையில் அரசர், தம் படைத்துறைத் தலைவராகிய குமார சுவாமிப் பிள்ளையையும், அவருடைய உதவியாளர் தாணுப்பிள்ளையை யும் அழைத்து மறவரடங்கிய படையையும் சில நூறு குதிரைகளையும் தயாரிக்கவும், கடக்கரை, மந்தரம்புத்துர், அரம்பாலி, கன்னியாகுமரி இவற்றிற்கிடையே வேலியாக மண்சுவர்களை எழுப்பவும், நுழைவதற்குச் சிறப்பான வாயில்களைக் கட்டி, மறவர் கூட்டங்களையும், குதிரை வீரர் களையும் கொண்டு காவல்புரியும் படியாகவும் ஆணையிட்டார். சில மாத காலத்தில் இந்தத் திட்டங்கள் திறம்படச் செய்யப்பட்டன. திரு வாங்கூர் வெளிநாட்டார் படையெடுப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

மறவர் குதிரைப்படை

பிறகு குமாரசாமிப்பிள்ளை ஒரு மறவர் படையுடன் திருக் கண்ணக்குடிக்குச் சென்று தளவாயை விடுத்து வரும்படி பேரரசர் கட்டளையிட்டார். அந்தத் துணிவுமிக்க அலுவலரும், அவ்வேலையை ஊக்கத்துடன் உடனடியாகச் செய்து முடித்தார். பேரரசர் அவர் செய்கை யால் மனநிறைவு பெற்றார். ஏனெனில் இந்தச் செயல் (oxpolit) மூல