பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

409 கால்டுவெல்


மாகத் துன்பம் நிறைந்த இடர்பாடான நிலையிலிருந்து தளவாயை விடு வித்ததன்றித் தன்னை அழுத்தி வந்த கவலையையும் பாதுகாப்புச் சுமையையும் நீக்கிக் கொண்டார்.

பின்னர் பேரரசர் திருச்சிராப்பள்ளிப் படையைப் பாதுகாப்பாக நீக்கி விடலாமென எண்ணி அந்த நகரத்திற்கு அணிவகுத்துச் செல்ல ஆணையிட்டான். அரசர் பாண்டிய அரசுக்கு அவருடைய முடிவைத் தெரிவித்து, முன்னாள் அரசருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் நிபந்தனையிலிருந்து அரசரை விடுவிக்க வேண்டுமென்று ஆளுநரை வேண்டினார்.

‘மானியக்காரத் தலைவர்களும் (fenadatory chiefs) பிரபுக்களும், திருச்சிராப்பள்ளி துணைப்படைதிரும்பியதும் மறுபடியும் கலகம் செய்யத் தொடங்கினர். அவர்கள் எப்பொழுதும் விடுதலையை வேண்டி இருந்தார்களாதலால் முன்போல அவர்கள் இணைந்து கூட்டுக் கழக இணைப்பு ஒன்றை நிறுவினர். அதில் முன்னாள் அரசருடைய இரண்டு மகன்களும், குஞ்சுத் தம்பிகள் எனப் பெயர் பெற்ற பாபுத்தம்பி, ராமன் தம்பி இருவரும் சேர்ந்தனர். குஞ்சுத்தம்பிகள் அவர்கள் தந்தை காலத்தில் பிரபுக்களிடையே உயர்ந்த நிலையில் இருந்தனர்; அன்று வளமிக்கராய் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள் இப்பொழுது நாட்டின் சாதாரண பிரபுக்களுடைய நிலைக்கு இறங்கிவிட்டனர். தங்கள் வீழ்ச்சிக்காக மிகவும். வருந்தினர். கூட்டணி அவர்களுக்கு இறங்கி அரசு ஆணையாளரை அடக்க அவர்களைத் தகுந்த கருவிகள் என்று எண்ணி, தந்தையின் அரியணையை அடைய உரிமைக்குரலெழுப்பும்படி அவர்களைத் தூண்டினர். அவர்களுள் ஒருவராகிய பாபுத்தம்பி போதுமான வசதிகளைப் பெற்றிருந்தாராகையால், மலையாளம் ஆண்டு 905-ல் (கி.பி. 1730)ல் திருச்சியை நோக்கிச் சென்றார். அங்கு பாண்டியனுடைய ஆளுநரிடம் தன்னுடைய கற்பனைத் துன்பங்களை எடுத்துக் கூறி, மார்த்தாண்ட வர்மன் வலுவில் முறைமையற்று அரசு பெற்றதால் அவனுடைய அரசு அவருக்குப் பெரிய அநீதி இழைத்துள்ளது என்று கூறினான். அத்தலைவருடன் தான் அந்த அரசைப் பெற உதவுவதற்காக சில நிபந்தனைகள் விதித்து உடன்படிக்கை செய்து கொண்டான்; தனக்கு வர வேண்டிய திறைப்பணம் வராததாலும், மார்த்தாண்ட வர்ம மகாராஜா துணைப்படையைத் திருப்பியனுப்பி விட்டமையாலும் கோபமடைந்திருந்த கவர்னர், பாபு தம்பியின் தவறான முறையீடுகளுக்கு விருப்புடன் செவி சாய்ந்தார்.

கவர்னர் தன்னுடைய பிரதிநிதிகளில் (agent) ஒருவரான அழகப்ப முதலியாரைப் போதுமான எண்ணிக்கையுடைய மனிதருடன் சென்று