பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 414


பாடத்தில் (ஏப்ரலில்) மக்புசுக்கான் கோட்டையின் பொறுப்பேற்றுக் கொண்டு தன் அதிகாரத்தை அங்கு நிலைநாட்டி, திருநெல்வேலிக்குப் போனான். கர்னல் ஹீரான் ஆங்கிலப் படையோடு திருச்சிராப் பள்ளிக்குத் திரும்பினான்.

தன் தோல்விக்குப் பிறகு திருநெல்வேலிக்கு ஓடிய மூடிமையா பூலித்தேவன் என்ற பாளையக்காரனின் பாதுகாப்பில் அடைக்கலம் புகுந்தான். திருநெல்வேலியிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஆங்கிலேயத் துருப்புகள் புறப்பட்டவுடன் மகாராசாவிடம் தனக்கு உதவிக்காக விண்ணப்பித்தான். இழந்த களக்காட்டு எல்லையைத் திரும்பக் கைப் பற்றத் தூண்டினான். பூலித்தேவர் நீண்டகாலமாகத் திருவாங்கூரைச் சார்ந்து இருந்தமையால் அவர் தன்னுடைய எதிர்ப்பையும் உதவினார். 2000 காலாட்படையுடன் அதற்குச் சமமான எண்ணிக்கையுள்ள குதிரைப் படையுடனும் ஒரு வலிமைவாய்ந்த படை இளவரசன், மூடிமையா இருவர் துணையுடன் திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டது. அதிக எதிர்ப்பில்லாமலே களக்காடு கைப்பற்றப்பட்டது. எனினும் மகாராசா அத்தகைய செயல் ஆங்கில அரசைச் சினமுறச் செய்யுமென்று எண்ணி தன் படையைச் சிலகாலம் பின்வாங்கும்படி கட்டளையிட்டார். உரிமையின்றி கைப்பற்றப்பட்ட தனது எல்லைகளைத் திரும்பக் கைப்பற்றிய செயல் ஆங்கிலேயர்களைச் சினமடையச் செய்யவில்லை என்பதை அறிந்து கொள்ளும் வரை தன் எல்லாச் செயல்களையும் தள்ளிப் போட்டுவிட்டார். தொடர்ந்து மகாராசா போதுமான ஒரு படையை காப்டன் டிலானாயின் தலைமையில் பாளையக்காரர் பூலித்தேவர் துணையுடன் முன்னேறக் கட்டளையிட்டான் (redered back). மக்புசுகானின் படை தோற்கடிக்கப்பட்டது. களக்காடு கைப்பற்றப்பட்டது. அதைக் காத்து நின்ற 500 காலாட்படையும் 200 குதிரைப் படையும் சிறைசெய்யப்பட்டனர். இவ்வாறாக களக்காட்டையும் அதற்குரிய எல்லா எல்லைப்புறங்களையும் மகாராசா மறுபடியும் மீட்டார். இப்பொழுது திரு வாங்கூர் அரசு வடக்கே பெரியாற்றிலிருந்து தெற்கே களக்காடு வரைப் பரவி இருந்தது. - பக்கம் 162.

நவாபுடன் உடன்படிக்கை

முன்னாள் அரசரின் ஆட்சியின்போது திருவாங்கூர் பாண்டிய அரசின் கவர்னரிடமிருந்து படையுதவி பெற்றதற்கு ஆண்டுதோறும் ஒரு குறிப் பிட்ட திறை செலுத்துவதாக உறுதி கூறி திருச்சியில் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டதைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து கர்நாடக நவாபு அந்த அரசின் நிர்வாகத்தை நேரடியாக ஏற்ற பின்னர், மகாராசா பழைய உடன்படிக்கையை நவாபுடன் புதுப்பித்துக்