பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 422


கர்னல் கார்ஸ்லியால் போருக்கான நடவடிக்கைகளை எடுக்க முடிய வில்லை. 1808இல் அந்தக் கிளர்ச்சி தோன்றியது. இராசாவும் அவரது முக்கிய பணியாட்களும் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு அடங்கிக் கிடந்த தாகக் கூறினர். கொச்சியில் உள்ள அதிகாரி தங்கள் நடைமுறை, செயல்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்தார்.

திவானின் நட்பைத் தேடல்

திவான் தமது போர் நிலவரத்தில் தமக்கானத் துணையைத் தேட முடிவெடுத்தார். நாயர்களுக்கும் பிற சாதிக்காரர்களுக்கும் புதிய ஆட் களைப் படையில் சேர்க்குமாறு இரகசியமாக ஆணையிட்டார். அரண் களைப் பலப்படுத்தினார். பிரெஞ்சு அதிகாரிக்கும் கள்ளிக்கோட்டை சமாரியருக்கும் உதவ வேண்டி எழுதினார். கொச்சி பாபத்துமேனன் அவர்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்டது. ரெசிடெண்ட் இவற்றை அறிந்த போதிலும் வழக்கம் போல் செயலாற்றி வந்தார். மகாராசாவையும் திவானையும் பாக்கிப் பணத்தைக் கட்டுமாறு வற்புறுத்தினார். சென்னை அரசும் மகாராசாவை உடனே பணம் கட்டுமாறு வற்புறுத்தி வந்தது.

ரெசிடெண்டை படுகொலை செய்யத் திட்டம்

திவான் இவ்வேளையில் ரெசிடெண்டைப் படுகொலை செய்யத் திட்டமிட்டார். ஆனால் பழம் பாக்கியைக் கட்டிவிடப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். ரெசிடெண்ட், பாக்கியைக் கட்ட வேண்டும் அல்லது ஆட்சியை மாற்றவேண்டும் என்று வற்புறுத்தினார். தான் ஓய்வு பெற விரும்புவதாக நடித்த திவான் மெக்காலேவுக்குக் கடிதம் எழுதி, தாம் கள்ளிக்கோட்டையில் தங்கப் போவதாகவும் அதற்குத் துணை யாகப் பிரிட்டிஷ் படையை அனுப்புமாறும் கேட்டிருந்தார். ஆளுநரின் துணைப்படையை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் இவரது திட்டமாகும்.

வேலுத்தம்பி ஆலப்புழையிலுள்ள கோட்டைக்காவற்படைக்குக் கொல்லத்திலிருந்து கொச்சி கோட்டையைத் தாக்குமாறும் ஆளுநரைக் கொலை செய்யுமாறும் ஆணை அனுப்பினார். அப்போது செஞ்சு கிருஷ்ண மேனனும் பிரிட்டிஷ் கோட்டைக் காவற்படையைத் தாக்குமாறு ஏற்பாடு செய்தார்.

ரெசிடெண்ட் கொலைத் திட்டத்தின் தோல்வி

சிறப்புப்படையானது மூடிய படகுமூலம் கொல்லம், ஆலப்புழை ஆகியவற்றினின்றும் வைக்கம் பத்மநாப பிள்ளையுடன் புறப்பட்டு ஆலங்