பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 424


அழிக்கப்பட்டன. திவான் வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்கிறார். தனது கோட்டத்தைப் பலப்படுத்தி வருகிறார். நான் தாமதமின்றி படை அனுப்புமாறு கர்னலுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 1808 ஆம் ஆண்டு டிசம்பர் 29இல் கொல்லத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றுள்ளது. திவான் கொல்லத்திற்கு வந்து அச்சக்திகளை ஊக்குவித்தார். அவர் பின்னர் கொல்லத்திற்குக் கிழக்கேயுள்ள குண்டரேக்கு வந்து பொது அறிக்கையொன்று விட்டிருக்கிறார். இதனால் திருவாங்கூர்மக்கள் எல் லோரும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பலரால் குடியிருப்பு தாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கர்னல் சால்ம ரால் தோற்கடிக்கப்பட்டனர். மெக்காலேவைக் கொலை செய்யும் முயற்சி தோற்கடிக்கப்பட்டதால் ஆலங்கோட்டு சர்வாதிகாரிகள் திரும்பவும் வெற்றிபெற முயல்கின்றனர். அவரால் 2000 பேர் படையில் சேர்க்கப்பட்டு கொச்சியில் வைக்கப்பட்டுள்ளனர். கொச்சி மந்திரி பாலத்துமேனனும் 2000 பேர் அடங்கிய படையைத் தயாரித்து நகரைத் தாக்கிடத் தயாராயுள்ளனர். நீதிபதிகளும் கம்பெனி அதிகாரிகளும் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டனர். மக்களும் வியாபாரிகளும் கள்ளிக்கோட்டைக்குச் சென்று விட்டனர். இவ்வாறு கம்பெனிக்கு எதிர்ப்பு பரவலாகக் கிளம்பியுள்ளது. கர்னல் கப்பேஷ் வடஎல்லைக்கு வந்ததும் மேஜர் கிவைத் கொச்சியை விட்டுக் கிளம்பியதும் அக்கிளர்ச்சி அடங்கியுள்ளது. கொல்லத்தில் கர்னல் சால்மரின் நடவடிக்கையால் ஜனவரி 18ல் திவானின் சக்திகள் முழுமையாக அடக்கப்பட்டன.

கிளர்ச்சியில் ஈடுபடாதிருக்குமாறு திருநெல்வேலி மக்கள் சென்னை அரசால் எச்சரிக்கப்படல்

சென்னை அரசு கீழ்க்கண்ட பொது அறிக்கையைத் திருநெல்வேலி மலபார் மக்களுக்காக வெளியிட்டது:

அறிக்கை: ஜார்ஜ் கோட்டையிலுள்ள மாண்புமிக்க கவர்னர் அறிவித்துக் கொள்வது: திருவாங்கூர் திவான் திருநெல்வேலி மக்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். எனவே, கவர்னர், அவர்களைக் கலந்து கொள்ளாதிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறார். அப்பகுதி மக்கள் தங்கள் நலனில் அக்கரையுள்ளவர்கள் என்பதிலும் பிரிட்டிஷ் அரசால் பெறும் நன்மைகளைத் தொடர்ந்து அனுபவிக்காமல் இழக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறார்.

ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டை,

15 ஜனவரி 1809,