பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

429 கால்டுவெல்


சேர்த்துக் கொண்டார். மானிகபட்டா தூதுவராக ஆங்கிலேயர் துணையுடன் இவற்றை மீட்க சென்னைக்கு அனுப்பப்பட்டார். நவாப் வெற்றி பெற்றார். 3000 வெள்ளாளக் குடும்பத்தை இழப்பீடாகப் பெற்றார். பின் 8,00,000 ரூபாய் பிரிட்டிஷ் அரசுக்குச் செலுத்தப்பட்டது.

இதனை மேற்கண்ட கூற்றால் அறியலாம். இதனால் இரு பிரிவுக்குள் யார் ஜமீன்தார் என்று போராட்டத்தைக் காணலாம். முகமது யூசுப் கான் 1764இல் தூக்கிலிடப்பட்டார். செங்கோட்டைக்கும் நவாப்புக்கும் உள்ள தொடர்பு 37 ஆண்டுகளாக நீடித்தது.