பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

433 கால்டுவெல்


ஸ்ரீவில்லிப்புத்தூரில் பொதுவாக நோய் தோன்றியுள்ளது என்றுதான் கலெக்டருக்கு அறிக்கை சென்றது. பின்னர் அங்கிருந்து மலை யருகிலுள்ள கிராமங்களுக்குநோய் பரவியது.மார்ச் 26க்குள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிவிட்டது. தாசில்தார் தனது அறிக்கையில் குறிப்பிடும்போது சில கிராமங்களிலும் அறுவடைநடக்காமல் வயல்கள் விடப்பட்டுள்ளன என்றும் பல இடங்களிலும் மக்கள் குடிபெயர்ந்து விட்ட தால் முறையாக வரிவசூல் செய்ய இயலவில்லை என்றும் குறிப் பிடுகின்றார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து மலைவழியாக இந்நோய் தென் காசிக்குப் பரவி அங்கும் கடுமையாகப் பாதித்தது. பிப்ரவரி இறுதியிலும் மார்ச் முதலிலும் பல இடங்களில் பரவி வந்தது. நாளொன்றுக்கு 10 அல்லது 15 என்ற விகிதத்தில் இறப்பு நிகழ்ந்தது என்றும் சில கிராமங்களில் மக்கள் குடிபெயர்ந்த மாவட்டத்தை விட்டே விலகிவிட்டனர் என்றும் தாசில்தார் கூறுகிறார். அறுவடை செய்வதற்கு ஆளில்லாமல் வயல்கள் விடப்பட்டுள்ளன. தாலுகாதோறும் மக்கள் தொகை குறைந்து விட்டது.

பிரமதேசபுரத்தில் மக்கள் நவம்பர் மாதத்தில் நோய்ப்பட்டனர். மார்ச் மாதம் வரை இந்நோய் குறைவுபடாமல் இருந்தது. தாசில்தார் தமது அறிக்கையில் பல ஊர்களில் நோய்ப்பட்டோர்களைக் கவனிப்பதற்குக் கூட ஆளில்லாமல் இருந்தது. கடையத்தில் ஆயிரம் மக்களுக்கு மேல் நோயில் மாண்டனர். இங்கு 40 பிராமணக் குடும்பங்கள் இருந்தன. 26 குடும்பங்கள் குடிபெயர்ந்தன. 6 குடும்பம் அழிந்தது. ஏனையோர் இறந்தனர் என்கின்றார்.

சேரன்மாதேவியில் இந்நோய் சிறிது பிந்தி வந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்நோய் உச்சநிலையை அடைந்தது. மிகப் பெரிய அளவில் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டாலும் ஏனைய மாவட்டங்களை நோக்க இங்கு குறைவுதான்.

நெல்லையம்பலத்தில் மற்ற மலைப்பிரதேசங்களில் தோன்றியது போல ஆரம்பக் காலங்களில் தோன்றவில்லை. ஏப்ரலில் இந்நோய் அதிக மானதால் மக்கள் பலர் மாண்டனர். திருநெல்வேலி நகரத்தில் நாளொன்றுக்கு 15 முதல் 20 வரை மக்கள் மாண்டனர். வரவர இறப்பின் விகிதம் குறைந்துவிட்டது.

வேடு கிராமம், ஸ்ரீவைகுண்டம், குஸ்குத்தம், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில் ஏனைய இடங்களைவிட மிகச்சிறிதளவே இந்நோய் பாதித்தது. இங்கு நோய் பரவினாலும் அவை மக்களின் தொழிலைப்