பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

435 கால்டுவெல்



பிற்சேர்க்கை - III

திருநெல்வேலி மாவட்ட நூலாசிரியர்கள்

பாண்டியநாடும் அதன் தலைநகரான மதுரையும் நூலாசிரியர்களைப் பேரளவில் பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் புலவர்களாக விளங்கி இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளனர். தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மதுரையிலுள்ள சங்கம் புகழ்பெற்றுள்ளது. இச் சங்கம் கல்வி நிறுவனமாக இல்லாமல், புலவர் கூட்டமாக விளங்கியது. தங்களுக்குத் தெரிந்த தரமான இலக்கியங்களைத் திறனாய்வு செய்தனர். இங்குள்ள சங்கப் பலகை திறமான புலவர்களுக்கு வியக்கத்தக்க அளவில் விரிந்து இடம் கொடுக்கும் தன்மையுடையது. சங்கம் என்னும் வடமொழிப் பெயர், லத்தீன் மொழி தரும் 'கூட்டம்', கற்றோர் குழு’ என்னும் பொருளையே தருகின்றது. மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலங்களில் இருந்ததாகவும், மூன்றாவது சங்கத்தில் திருவள்ளுவர் வாழ்ந்ததாகவும் மரபு வழியில் கூறுவர். நாலடியாரும் இங்கு வாழ்ந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். வள்ளுவர் என்னும் பறைச்சாதியில் தோன்றிய திருவள்ளுவர் புலவர்களுள் இளவரசனாகத் திகழ்கிறார். இவர் பறையராக இருந்தாலும் சங்கப் பலகையில் இடம் பெற்றது வியப்புக்குரியதே. இக்கதையின் உண்மை ஒப்புக் கொள்ள முடியாததாக விளங்குகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி எழுதும் நமக்கு இச்சர்ச்சை தேவையற்றதுதான். அகத்தியர் மலையைக் கொண்டிருப்பதால் திருநெல்வேலி பெருமை கொள்ளுகின்றது. இம் மலையில் அகத்திய முனிவர் தென்முனி' என்ற பெயருடன் வாழ்ந்து, தமிழ் இலக்கணமும், மருத்துவமும், இரசவாதமும் எழுதினார். இவற்றிற்குச் சரியான சான்றுகள் இல்லாவிட்டாலும் இவை உண்மையெனக் கருதப்படுகின்றது. -

திருநெல்வேலி மாவட்டத்தினின்று தகுதிவாய்ந்த இலக்கியங்கள் பல புலவர்களால் இயற்றப்பட்டிருப்பினும், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடம் பெறும் வகையில் நால்வர் விளங்குகின்றனர்.