பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 438


இவ்வாறு அழைக்கப்பட்டார். பிரெஞ்சில் 'ஏப்' (Abb) என்று அழைக்கப் படுவதை இதனுடன் ஒப்பிட்டு நோக்கலாம். சில நேரங்களில் இவர் குமரகுருபர சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். சுவாமிகள் என்பது சுவாமி என்பதன் பன்மைச் சொல்லாகும். இவர் தாமிரபரணியின் வட கரையில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர். இவ்வூர் முக்கியமான இடமாக எப்போதும் விளங்குகின்றது. தென்கரை தாலுகாவின் தலைமையிடமாக உள்ளது. இது வைணவர்களின் புனித இடமாகக் கரு தப்படுகிறது. வைகுண்டம் விஷ்ணுவின்மோட்சமாகும். இவ்வூரில்7000 மக்களுக்கு மேல் வாழ்கின்றனர். இவர் திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றார். இது அவ்வாறானால் இவரது காலம் 1623-1659 எனக் குறிப்பிடலாம்.