பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 440


வழக்கம் உண்டு எனக் கருத இடமுள்ளது. இதில் மண்டையோடானது கழுத்துப் பகுதியிலே இருந்தது. என்றாலும் தோள்பட்டைப் பகுதி எவ் வாறு தாழிக்குள் நுழையும் என்று வியப்பாக உள்ளது. இவ்வெலும்புகள் வெளியே எடுக்கப்படும் போது நொறுங்கிவிடுகின்றன. எதுவுமே பாது காக்கப்படவில்லை. ஆனால் பெரியவரின் மண்டையோடும், பற்களும் கிடைத்துள்ளன. டாக்டர் பிரைசர்ஜன் (Fry Surgeon) தன்னுடைய ஆய்வின் மூலம் திருவிதாங்கூரிலிருந்து கூறுகிறார்: அரைக்கும் பற்களும், முன் பற்களும் தானியங்கயும், மற்ற வகை உணவுகளையும் புசித்ததால் சிதைந்து போன நிலையில் கிடைத்துள்ளன. நான் கண்ட வேறு சில தாழிகளிலும் இதுபோன்ற நைந்துபோன பற்களைக் கண்டேன். இதனால் பிணம் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்டது எனக் கருதலாம்.

இத்தாழிகளில் மனித எலும்புகளுடன் சில சிறிய மட்பாண்டங் களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தாழிகளின் வெளிப்புறங்களில் சிறிய மட்பாண்டங்கள் அடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மட்பாத்திரங்களும் நாகரிகமிக்கனவாக உள்ளன. டாக்டர் ஹண்டி (Dr Huntei) இதை ஆராய்ந்துள்ளார். எனக்கு இப்பாண்டங்கள் பளபளப்பாக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. அதிகப்படியாக இந்த மட்பாண்டங்கள் கருப்பு வண்ணத்தில் உள்ளன.

ஒரு தகட்டுப் பாளத்துடன் 5 சிறிய மட்பாண்டங்கள் கிடைத்த போது அவற்றை அங்குள்ள மக்களிடம் காட்டினேன். அவர்கள் அதனை எண்ணெய்க் கலயத்துடன் ஒப்பிட்டுரைத்தனர். அப்பாண்டங்களின் பயனை அறிந்து கொள்ள முடியவில்லை. தற்போது இதுபோன்ற பாண்டங்கள் வெங்கலத்தால் செய்யப்படுகின்றன. தாழியில் இது போன்ற பாத்திரங்கள் வெங்கலத்தில் வைக்கப்படுவதற்குக் காரணம் இறந்தபின்னரும் ஆவி வாழ்ந்து உண்பதும் பருகுவதும் உண்டு என்று நம்பிக்கை கொள்வதுதான். தாழியின் வாயில் தேங்காய் அளவுள்ள வட்டமான கல்லால் மூடப்பட்டுள்ளது.

பிறப்பிடக் கொள்கைகள்

அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இக்கல்லறை அடக்கத்தின் பயனும் முறைகளும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்குப் பெளத்தர்களையும் ஜைனர்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள மக்களிடம் ஒரு புராணக்கதை வழக்கில் உள்ளது. தாழிகளைப் புதைக்கும் வழக்கமுடைய மக்கள் இக்கதையும் உண்மையானவை என நம்புகின்றனர். ஆனால் எனக்கு இது அவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது. திரேதாயுகத்தில் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு