பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 442


இதற்காகத் தற்போது பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மதத்தால் இந்துக்கள் அல்ல

அறியாமையுள்ள மக்கள் கிராமங்களில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களின் தாழிகள் அங்கொங்றும் இங்கொன்றுமாக இல்லாமல் அதிக அளவில் நெருக்கமாக இடுகாடுபோல் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்களையும் இரும்புக் கருவிகளையும் ஆயுதங்களையும் காணும் போது இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிக மிக்கவர் என்ற முடிவுக்கு வரலாம். இன்று இதன் சுற்று வட்டாரத்தில் வாழ்கின்ற மக்களைப் போன்றே அன்றைய மக்களும் வாழ்ந்திருக்கின்றனர். இம் மக்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் மறைந்தார்கள்? என்ற ஐயங்களுக்கு இன்னும் முடிவில்லை. இவர்கள் பிராமணிய இந்துக்கள் அல்ல என்பது என் கருத்து. ஏனென்றால் ஆரியர்கள் அறியபடாததற்கு முன்னரே இம்மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். இதனால் இத்தாழிகள் கிறித்தவ சகாப்தத்தைவிட பழமையானவை என்ற கருத்தினைக் கொள்ள முடிகின்றது.

திருநெல்வேலி, மதுரை, திருவாங்கூரிலுள்ள வடக்கு தெற்குப் பகுதிகள் ஆகியவற்றில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள் இப்பகுதியின் வரலாற்றில் பல புதிய உண்மைகளைத் தந்துள்ளன. மற்ற பகுதிகளில் கிடைத்துள்ள தாழிகளை அறிந்து கொள்ளவும் ஆர்வமுடையவனாய் இருக்கிறேன்.