பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43 கால்டுவெல்

சோழர்கள் பாண்டிய நாட்டைப் பிடித்தார்கள் என்ற செய்தி மக்கள் மனத்திலிருந்து அறவே அகன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. அதைப் பற்றிக் கேள்வியுள்ள ஒரு தமிழனைக்கூட நான் சந்திக்கவில்லை. (1. வாழுந் தமிழனை வைத்தும் ஆய்ந்திருக்கிறார் பாதிரியார்! 2. ‘பொதுமக்கள் நினைவு குறுகியது’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழியின் கருத்து- ந.ச.). எனினும் இது ஐயத்தின் சிறு நிழலுக்கும் இடமில்லாத செய்தியாகும். அதற்கு ஆதாரமான கல்வெட்டுகள் நாட்டில் நிறைந்து கிடக்கின்றன. இராஜேந்திர சோழனும் கிழக்குப் பகுதிச் சாளுக்கியரின் வரியுரிமையாகக் கலிங்கநாடு அல்லது வடசர்க்காரை ஆண்டமையாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. திருநெல்வேலியின் ஒவ்வொரு பகுதியிலும், பாண்டி நாட்டின் ஒரு பகுதியாக அக்காலத்தில் கருதப்பட்டு வந்த தென் திருவாங்கூரிலுள்ள கோட்டாறு வரையிலுமுள்ள பகுதியிலும் இராசேந்திரனுடைய ஆட்சிக்கால கல்வெட்டுகள் கிடைக்கின்றன. (கல்வெட்டுகள் கிடைக்கும் வரலாற்றாய்வுக்குத் துணை). சாதாரணமாக அவன் இராசேந்திர சோழன் என்று வழங்கப்பட்டு வந்தான். ஆனால், ஒரு கல்வெட்டில் பிற்காலத்தில் இருந்த சாதாரண வழக்குகளை ஒட்டி இரு மரபுகளின் பெயர்களும் கலந்து இராசேந்திர சோழ பாண்டியன் என்று குறிக்கப்பட்டுள்ளது (அருமை. சிவராமகிருஷ்ணன் என்பது போல! - ந.ச.). அவன் நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தியது தெரிகிறது. எனது திருநெல்வேலிக் கல்வெட்டுகளுள் ஒன்று, அவனது முப்பதாம் ஆண்டு ஆட்சிகாலத்தியது (வரலாற்று ஆய்வுக்குக் கல்வெட்டு எவ்வளவு இன்றியமையாததாய் இருக்கிறது - ந.ச.).

தமிழ்க் கவிஞராகிய கம்பர் புகழ்பெற்ற தமது இராமாயண காவியத்தை அவன் காலத்தில் அரங்கேற்றினாரெனச் சில கதைகள் கூறுகின்றன. இராசேந்திரனுக்குப் பின்வந்த குலோத்துங்க சோழன் காலத்தில் அரங்கேற்றியதாக மற்றும் சில கதைகள் கூறுகின்றன. ஆனால் இக்காவியம் இராசேந்திரன் காலத்தில் தொடங்கப்பட்டுக் குலோத்துங்கன் காலத்தில் முடிக்கப்பட்டிருக்கலாம். மேற்சொன்ன இரு கதைகளுள் எதை உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், கி.பி.886 இல் பாடப்பட்டதாகக் கூறும் பாடல் நம்பத்தக்கது அன்று. ஏனெனில், அப்பாடல் குறிப்பிடும் காலம், 250 ஆண்டுகளுக்கு முற்பட்டதாய் உள்ளது. புத்தமித்திரர் என்ற புத்த இலக்கண ஆசிரியர் கம்பரைப் பற்றிக் கூறுகின்றார். டாக்டர் பர்ன்வெல் நம்புவதுபோலப் புத்தமித்திரர் எழுதிய இலக்கண நூல் உரிமையாக்கப்பட்ட வீரசோழனும் இராசேந்திர சோழனும் ஒருவனாய் இருந்தால், புத்தமித்திரரும் இராசேந்திர சோழன்