பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59 கால்டுவெல்


கொண்டு வந்தார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு குதிரையும் ஐந்நூறு தங்கச் சக்கிகள் நூறு வெள்ளிக்காசுகளின் மதிப்பிற்குமேல் (அதாவது ரூ.2200) (கால்டுவெல் காலத்தில்! - ந.ச.) விலையானதாலும் ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையுள்ள குதிரைகள் விற்கப்பட்டதாலும் அவ்வாறு கொண்டுவந்தார்கள். இந்த அரசனும் ஒவ்வோராண்டும் இரண்டாயிரம் குதிரைகளுக்கும் அதிகமாக வாங்கினான். இவனைப் போலவே அரசர்களாய் இருந்த இவனுடைய நான்கு உடன்பிறப்பாளர்களும் வாங்கினார்கள். ஒவ்வோர் ஆண்டிலும் அத்தனை குதிரைகள் தேவையாயிருந்தன. சரியாகக் கவனிக்கப்படாமையாலும் குதிரையை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமென்பதை மக்கள் அறியாததாலும் குதிரைலாடக்காரர்கள் இல்லாமையாலும் குதிரைகள் மிகுதியாய் இறந்தன. குதிரை வியாபாரிகள் குதிரை லாடக்காரர்களை ஒருபோதும் தங்களுடன் அழைத்து வருவதில்லை. அப்படி இங்கு வருகின்றவர்களையும், தங்களுடைய அதிகப் படியான குதிரை வியாபாரத்தைக் குறைத்து அதனால் ஆண்டுதோறும் கிடைக்கின்ற பெரிய லாபத்திற்குக் குறைவு ஏற்பட்டுவிடுமென்று குதிரை வியாபாரிகள் தடுத்துவிடுவார்கள். கப்பல்களில் அவர்கள் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள் (கர்னல் யூலின் ‘மார்க்கபோலோ’, தொகுதி - 285).

ரஷிஉதீனும் வாசபுவும் குதிரை வியாபாரச் செய்திகளைப் பற்றி ஒரேவிதமான விளக்கங்களைத் தந்துள்ளனர். இந்த அத்தியாயத்தில் போலோவிற்குக் குதிரைகளோடு இருக்கும் நெருங்கிய பழக்கத்தைப் பார்க்கும்பொழுது அவனே குதிரை வியாபாரத்திற்கு அதிகாரியாயிருக்க வேண்டுமென்று யாரும் ஐயுறுதல் கூடும். ‘ஒவ்வோர் ஆண்டும் தன்னாலேயே வளர்க்கப்பட்ட 1400 சிறந்த குதிரைகளைக் கையிஸ் தீவிலிருந்து மலபாரில் கொண்டு வந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மாலிக்-உல்-இஸ்லாம் ஜமாலுதீனுக்கும் வியாபாரிகளுக்கும் ஓர் ஒப்பந்தம் இருந்தது! என்று வாசபு கூறுகிறார். .......... அன்றியும், பெரிஷியாத் தீவுகளிலுள்ள காலிப், லாசிரா, பாரெயின், ஹர்மஸ், கலாடு போன்ற இடங்களிலிருந்து அவனால் முடிந்த அளவு அதிகமான குதிரைகளை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டான். பழைய கணக்குப்படி ஒரு குதிரையின் விலை 220 தினார் செம்பொன் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்விலைக்குக் குதிரையைக் கொடுக்க ஒப்புக் கொண்டமையால், ஏதேனும் ஒரு குதிரை இறக்க நேரிட்டால் அதன் விலை அரசாங்க கஜானாவிலிருந்து செலுத்தப்பட வேண்டும். அடாபக் அபுபெக்கர் ஆட்சிக் காலத்தில் இந்த இடங்களிலிருந்து மலபார்,