பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 82


ஆண்டுகளுககுள் கட்டிமுடிக்கப்பட்டது. இவ்வளவு குறைந்த கால அளவில் அவ்வேலையை மனிதர்கள் செய்திருக்க இயலாது, அது தெய்விக வேலையே ஆகும் என்னும் அளவிற்கு அக்கல்வெட்டு ஒரு பேரறிவிப்பாய் அமைந்துள்ளது. தென்காசி மக்களால கூறப்படும் பழமரபுச் செய்தியிலிருந்து இடைவெளியின் பாதிப்பகுதியை நிரப்பலாம். அதாவது, இக்கோவிலைக் கட்டிய பொன்னம்பெருமாள் பராக்கிரம பாண்டியன் என்பவன் தன் தகப்பனாகிய காசிகண்ட பராக்கிரம பாண்டியனுக்குப் பின் அரசுக்கு வந்தான். அவன் காசிக்குச் சென்று வந்தமையால் காசிகண்ட பராக்கிரம பாண்டியன் எனப் பெயர் பெற்றான். அவனையடுத்து வந்த அரசன் வீர பாண்டியன். தாமிரபரணியின் வடகரையிலுள்ள திருவைகுண்டத்தில் அவன் காலத்து இரண்டு கல்வெட்டுகளை நான் கண்டேன். அவை இரண்டும் வெவ்வேறு காலத்தவையாயினும், அவனுடைய ஆட்சிக்காலம் 1437 இல் ஆரம்பித்தது என்னும் செய்திக்கு இரண்டிலும் சான்று இருக்கிறது. அவனுக்கு முந்தியவர்களின் ஆட்சிக்காலம் மிகக் குறுகிய காலமாயிருந்தது. நாம் முன் பார்த்ததுபோல் அது 1431 இல் தொடங்கி, 1437இல் முடிவடைந்தது. கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் அடுத்த அரசன், மற்றொரு வீரபாண்டியன். மெக்கன்ஸி சுவடியின்படி, 1475 இல் அவன் ஆட்சி தொடங்கியது. 1490 இல் அவன் அரசு செலுத்தியது ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் கோவிலிலுள்ள கல்வெட்டில் நான் கண்ட அடுத்த அரசன் பெயரும் பராக்கிரம பாண்டியன் என்பது. அவன் 1516 இல் ஆட்சி தொடங்கினான். இடைவெளியின்றி அடுத்தாற்போலப் பட்டத்திற்கு வந்தவன் விக்கிரம பாண்டியன். 1543 இல் அவன் ஆட்சி தொடங்கியது. அவனை அடுத்து உடனே பட்டத்திற்கு வந்தவன் வல்லபதேவன். அவன் அதிவீரராம பாண்டியன் என்றும் வழங்கப்பட்டான். குற்றாலத்திலுள்ள கல்வெட்டொன்றின்படி அவன் ஆட்சி 1565 இல் ஆரம்பித்தது. அவனது நாற்பதாவது ஆண்டே - அதாவது 1605 ஆம் ஆண்டே கல்வெட்டில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. தென்காசியிலுள்ள அவனுடைய மற்றொரு கல்வெட்டு 1562 இல் அவன் ஆட்சி தொடங்கியதாகக் கூறுகிறது. அந்தக் கல்வெட்டிலிருந்து அவன் அதிவீரராமபாண்டியன் என்றுதான் வழங்கப்படுகிறானே தவிர, வல்லபதேவன் என்ற பெயர் அவனுக்கு இல்லை என்பது தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒருமடத்தைச் சேர்ந்த செப்புப் பட்டயம் ஒன்றின் படி அதிவீரராமன் 1610 இல் இருந்திருக்க வேண்டுமென டாக்டர் பர்னல் தெரிவிக்கிறார். இச்செய்தியின்படி அவன் ஆட்சிக்காலம் அதிகமாக நீடிக்கிறது. ஆனால், அதில் ஒன்றும் ஐயமில்லை. அதே