பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

95

களைப் போலவுமின்றி, சீன மொழிகளைப் போலவுமின்றி தனிப்பட்ட ஒருவகை இனமாயின. சித்திய மொழிகளைச் சிலர் தாத்தார் மொழியினம் என்பர்; பின்னிஷ் இனம், ஆல்தாயிக் இனம், மங்கோலிய இனம், துரானிய இனம் என்றும் பலவாறாகப் பலர் கூறுவர். ஆனால் இவையனைத்தும் இப் பெரு மொழிக் குழுவிலுள்ள மொழியினங்கள் பலவற்றுள் ஒன்றிரண்டையே தனித்தனிக்குறிக்குமாதலால் அவற்றைப் பெரு மொழிக் குழுவின் பெயராகக் கொள்ளல் சாலாது. இதுகாறும், பண்டைக் கிரேக்க அறிஞர்களால் சித்தியம் என்ற பெயர் பொதுப்பட ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் இருந்துவந்த நாகரிகமற்ற பண்டை மக்களைக் குறிக்கவே பயன்படுத்தப் பெற்றுவந்துள்ளமையால் அதனைப் பெயராகவே வழங்குதலே சால்புடைத்தாம்.

பேரறிஞர் ராஸ்க் திராவிட மொழிகள் சித்தியச் சார்புடையவை எனக் கூறினவர்களுள் முதல்வராயினும், அதனைத் தெளிவுபடுத்தி விளக்க எத்தகைய முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரைப் பின்பற்றிய பலரும் அதேமாதிரி அவர் கூறியதைக் கூறினரேயன்றி வேறு ஒன்றும் செய்ய வில்லை. பிரிச்சார்டு[1] என்பார் தம் ஆராய்ச்சிகளில் சித்திய திராவிட மொழிகளின் சில பொதுப்படையான ஒற்றுமைகளை ஒன்றிரண்டு இலக்கணச் சார்பான எடுத்துக்காட்டுகளுடன், விளக்கிப் போயினர். ஆதாரங்களுடன் ஆய்ந்து விளக்குவது எளிதன்று. ஏனெனில் அங்ஙனம் விளக்க வேண்டுமாயின் முதன் முதலில் திராவிட மொழிகளைத் தனித்தனி ஆராய்ந்து அவற்றின் ஒப்புமையின்மூலம் அவற்றின் பண்டைய உருக்களையும் இலக்கண அமைதிகளையும் தலைமையான பண்புகளையும் அறிவதோடு, அதேமாதிரிப் பிற சித்திய உட்பிரிவுகளின் பண்புகளையும் உணர்ந்தாக


  1. Prichard