பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

றுமை யிருப்பதைக் தான் நாம் அருமையாய்க் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலே திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறுபட்டவை என்பதற்குக் காட்டிய அக்காரணங்களையே அவை சிக்கிய இனங்களுடன் ஒன்றுபட்டவை என்பதற்கும் காட்டலாகும். சிக்கிய இனத்துட்பட்ட மொழிகள் அனைத்தும் ஒரே இனம் என்பதையும் அக் காரணங்களே காட்டும். அவற்றின் விளக்கத்தைக் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலுங்கூட அவை தொடர்பு என்பது ஐயமறத் தெளிவாகும். சில கூறுகளில் மட்டும் திராவிட மொழிகள் இந்து - ஐரோப்பிய மொழிகளை ஒட் டியவையாய்க் காணப்படுகின்றன; அஃதாவது ஒரளவுக்கு, ' அடுக்கியல் மொழியாய் இருப்பதிலிருந்து முன்னேறி (இந்து-ஐரோப்பிய மொழிகளைப் போல) ச் சிதைவியல்' மொழிகள் ஆகியுள்ளன. வேற்றுமையிலும் வினைத்திரிபிலும் பயன்படும் துணைச் சொற்களிற் பல தனி மொழியாக வழக்காறற்றுப்போயின. ஆனல் இஃதொன்றை முன்னிட்டு, திராவிட மொழிகளைச் சித்திய இனத்திலிருந்து பிரிக்க வேண்டியதில்லை; ஏனெனில் இத்துணைச்சொற்கள் சிற்சில இடங்களில் முற்றிலும் உருபுகள் அல்லது விகுதிகளாகக் குறைந்துவிட்டனவாயினும், சொற்களின் பகுதிகளிலிருந்து இவை எப்பொழுதும் பிரிக்கப்படக் கூடியனவாகவே இருந்துவருகின்றன; இந்து-ஐரோப்பிய மொழிகளிற் போன்று இவை பகுதியுடன் ஒன்றுபட்டு ஒரே மொழியின் கூறாய்விடவில்லை. இந்து - ஐரோப்பிய மொழிகளில் இவை அங்ஙனம் கலந்து விட்டபடியால் பகுதி எது, விகுதி எது என்று பிரிப்பது கூட அரிதாய் னவிடுகிறது. அதனேடு, துருக்கியம், பின்னியம், ஹங்கேரி

1. Inflexional. M