பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

101

கள் இந்த, உக்ரோ - பின்னிஷ் மொழிகளைச் சிறப்பாக ஒத்திருக்கின்றன என்பது இங்கே கூறவேண்டியதொன்றாகும்.திராவிட மொழிகளுக்கும், இப் பெஹிஸ்தன் அட்டவணையின் மொழிக்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகள் வருமாறு : ---

(i) இவ் அட்டவணைகளில் ட் ட, ட, ண என்ற நா அடி அண்ண ஒலிகள் உள்ளன. இதே ஒலிகள் திராவிட மொழிகளிலும் உள்ளன. வடமொழியிலும் இவை உள்ளனவாயினும் (பிற ஆரிய மொழிகளுள் இல்லாமையை நோக்கக்) திராவிட மொழிகளைப் பின்பற்றி வடமொழியில் ஏற்பட்ட ஒலிகளே இவை என ஊகிக்கலாம். நாரிஸும் இக்கருத்தையே வெளியிட்டுள்ளார்.

(2) திராவிட மொழிகளுள் தமிழைப்போல, இவ் அட்டவணை மொழிகளுள் வல்லெழுத்துக்கள் மொழிமுதலில் வரும்பொழுதும் இரட்டித்த இடத்தும் வல்லொலி உடையவையாகவும், மொழி இடையே உயிர்களின் நடுவே வரும் பொழுது அண்மை அல்லது அரை அங்காப்பு ஒலியுடைய னவாகவும் ஒலிக்கின்றன.

(3) இவ்வட்டவணை மொழியின் ஆறும் வேற்றுமை உருபுகள் ன, னின, இன்ன என்பவையாகும். இவற்றிற்குச் சரியான திராவிட உருபுகள் தெலுங்கு னீ என்பதும், கோண்டு அல்லது பிராகுவி ன அ என்பவையும், தமிழ் இன் என்பதும் ஆகும்.

(4) அட்டவணைகளில் நான்காம் வேற்றுமை உருபு இக்கி அல்லது இக்க என்பதாகும். இதனையொக்க உருபுகள் தாத்தார்-துருக்கியக் குழுவிலும், உக்ரியன் இனத்திலும் உள. ஆனால் இதனை முற்றிலும் ஒத்திருப்பவை திராவிட உருபுகளாகிய கு, கி, க என்பவையாம். தமிழ், மலையாள மொழிகளில் இவ்வுருபுகள் இரட்டிக்கும்போது அவற்றின்