பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

103

(8) அட்டவணை மொழியிலும் திராவிட மொழிகளைப் போலவே பெயரெச்சம் இருக்கிறது.ஆனால் அதோடுகூடவே அதில் இணைப்பு இடப்பெயர் ஒன்றும் காணப்படுகிறது. ஆகும். இப்பகுதி பாரசீகத்தினின்றும் மொழிபெயர்க்கப்பட்டதாதலால் பாரசீகத்திலுள்ள இணைப்பு இடப்பெயரைத்தான் இங்கே புனைந்து உண்டுபண்ணியிருக்கவேண்டும் என்று நாரிஸ் கருதுகிறார். அட்டவணையின் பெயரெச்சம் உருவில் திராவிடப் பெயரெச்சத்தினின்றும் வேறுபட்டிருப்பினும் அதன் பொருளும் பயனும் திராவிட வழக்கை ஒத்தே இருக்கின்றன. இப்பெயரெச்சமே சிக்கிய இனச் சார்புடைய மொழிகள் அனைத்திற்கும் பொதுவான சிறப்புப் பண்பு எனக் கொள்ளலாம் போலும்!


(9) அட்டவணையின் ஏவல் எதிர்மறை முடிபு இன்னி, கோண்டில் இது மின்னி ஆகும்.

இவ்வொற்றுமைகள் நீங்கலாகப் பிறவேற்றுமைத் திரிபுகளில் பெஹிஸ்தன் அட்டவணையின் மொழி ஹங்கேரியம், மோர்டுவின் முதலிய பிற உக்ரிய மொழிகளை ஒத்திருக்கின்றது. ஆனால், இவ்வகைகளிலெல்லாம் திராவிட மொழிகள் வேறுபடுகின்றன. அவற்றின் வினைச்சொல்லாக்கம் சிக்கலற்றது. அவை பெரும்பாலும் காலங்காட்டும் இடைநிலைகளுடனும், அவற்றின்பின், பால், இடம் காட்ட அவற்றிற்குரிய இடப்பெயர்களின் திரிபுகளையே கொண்டும் விளங்குகின்றன். இவ்வகையில் வேற்றுமைகள் இருந்தும்கூட, மேற்கூறிய ஒற்றுமைகள் இன்றியமையாச் சிறப்புடையன ஆதலின், திராவிட மொழிகளுக்கும் சித்திய மொழிகளுக்கும் இடையிலுள்ள உறவு ஒருசிறிதேயாயினும் அஃது அடிப்படையானதே என்பதில் ஐயமிருக்க முடியாது. ஏனெனில், இவ்வளவு வேற்றுமைகளுக்கிடையிலும் இன்றியமையாத ஒற்

1. Relative Pronoun. 2. Mordvir