பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

'தென்னிந்திய மொழிகளை எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து படிக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை வடமொழித் தொடர்புடையனவெனவும், இந்து-ஐரோப்பிய மொழியினத்துடன் மிகவும் நெருங்கிய பண்டைத் தொடர்பு உடையனவெனவும் காணலாம். ஆனால், அவை வெறும் பாகதங்கள் என்றே, வடமொழிச் சிதைவுகள் என்றே கூறிவிட முடியாது. அவை இந்து-ஐரோப்பிய மொழியினத்துள் இடம்பெற வேண்டியனவே என்றும், வடமொழிக்கு இணையான வேறொரு துணைமொழியின் சிதைந்த கூறுகளே அவை என்றும், அவையும் வடமொழியும் ஒரே பண்டை மூல மொழியின் கிளைகள் என்றும் யாம் எப்பொழுதும் கருதி வந்துளோம். இந்து-ஐரோப்பிய மொழியினத்தைச் சேர்ந்த கிரேக்கம், காதிக், பெர்ஸியன் முதலிய மொழிகளுடன் அவை நெருங்கிய தொடர்புடையன என்பதற்கு உறுதியான சான்றுகள் பல உள ; அத்தகைய தொடர்பு வடமொழிக்கு இருந்ததாகச் சொல்வதற்கில்லை”. 'மலைச்சொற்பொழிவு ' எனும் விவிலியப் பகுதியைத் திராவிடமொழிகள் நான்கிலும் மொழிபெயர்த்துத் தந்துள்ள தம் நூலின் முன்னுரையில், போப் பின்வருமாறு எழுதியுள்ளார் : இந்தத் திராவிட மொழிகளுக்கும் கெல்திக் தெயுத்தோனியம் ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள அடிப்படையான ஆழ்ந்த உறவுகளை மொழியியலார் கூர்ந்து நோக்குதல் வேண்டும். இடமும் காலமும் வாய்ப்பின் இவ்வொப்புமைகளை விரித்தெழுதக் கூடும். இந்நூலின் அடுத்த பதிப்பிலோ வேறு நூலிலோ இதுபற்றி மேல் எழுதக் கருதியுள்ளோம். முழு ஒப்புமை அகர வரிசை ஒன்றாலன்றி வேறெதனாலும் இம் மொழிகளின் இன உறவை விளக்குதலரிது.” கடைசியாக, போப்


1. Gothic. 2. The Sermon on the Mount. 3. Celtic. 4. Teutonic.