பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

(1) பகுதியின் ஒரு கூற்றை இரட்டித்து இறந்தகாலம் உணர்த்தல்.

(s) வினைப்பகுதியின் முதலுயிர் நீண்டு தொழிற் பெயராதல்.

மேற்காட்டிய சில பகுதிகளாலேயே இந்து-ஐரோப்பிய-திராவிடத் தொடர்பு ஒன்று உள்ளது என்பது புலப்படும். அன்றியும், திராவிட மொழிகளுக்கு அருகிற் பன்னெடுநாளாய்ப் பயின்றுவந்த மொழி வடமொழியே யாயினும், திராவிட முதற்சொற்களிற் பல வடமொழி அல்லது கீழே இந்து - ஐரோப்பியக் குழுவைவிட மேல ஐரோப்பியக் குழுவையே சார்ந்தவையாயுள்ளன என்ற கூற்றின் உண்மையும் விளங்கும். எனவே, திராவிட மொழியைச் சித்திய இனச் சார்புடையதென வகுத்துக் கொள்வதே சரியாயினும், அந்தச் சித்திய இனத்திலுள்ள மற்றெல்லா மொழிகளையும் விட இந்து-ஐரோப்பிய மொழிகளுடன் மிகப் பலமான, பழைமையான அரிய ஒப்புமைகளையுடைய குழு திராவிடக் குழுவே என்பது தெளிவாகும். இக்குழுவை ஆரிய சித்திய இனங்களுக்கு இடைப்பட்ட குழு என்று சொல்லாமற் போனலுங்கூட, இந்து-ஐரோப்பிய இனத்துடன் உறவுடைய சிக்கிய உறுப்பு மொழி என்றேனும் கூறத் தடையில்லை. இந்த இரண்டு இனங்களின் மிகப் பழைமையான ஒருமைப்பாட்டுக்கும் இதுவே சான்றாகும். இக்கொள்கை சரியாயின், திராவிட மொழிகளிலுள்ள இந்து - ஐரோப்பிய ஒற்றுமைகள் நம்மை வரலாற்றுக் காலங்கள் அனைத்திற்கும் முற்பட்டகாலத்திற்குக் கொண்டு செல்லுகின்றன ; அதுமட்டுமோ? சமயக் கதைகளின் தோற்ற காலத்ற்கும் முந்தியும்,இந்து-ஐரோப்பிய இனத்தார் மேலேஇனம், கீழைஇனம் எனப் பிரிவதற்கும் முந்தியும், இந்து - ஐரோப்பிய இனத்தானும், இன்று சித்தியச் சார்புடையவை என்று