பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ. திராவிட மூலமோழியின் இயல்பை உள்ளவாறறிவிக்கும் மொழி எது?



திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புக்களை ஒப்புமைப்படுத்துமுன் திராவிட மூலமொழியின் அமைப்பை எங்ஙனம் அறியலாகும், அதற்குத் துணைசெய்யும் மொழி யாது என்பவற்றை ஆராய்தல் நலம். சிலர் செந்தமிழ் என்று கூறப்படும் இலக்கியத் தமிழே பண்டைக் திராவிட மூல மொழியின் சிறந்த வகைக்குறிமொழி எனக்கருதுகின்றனர். (செந்தமிழின் மதிப்பை ஈண்டு ஒரு சிறிதும் குறைவுபடுத்தக் கருதவில்லை.) எந்த ஒரு தனிப்பட்ட மொழியையும் திராவிட மொழிகளின் தொன்மையை விளக்குங் கண்ணாடியாகக் கொள்வதற்கில்லை என்றுமட்டும் துணிந்து கூறலாம். இன்றுள்ள மொழிகள் அனைத்தையும் ஒப்புமைப் படுத்துவதனலேயே நாம் கிட்டத்தட்ட அப்பண்டையமொழியின் நிலையை ஒருவாறு அறியமுடியும். இவ்வகையில் செந்தமிழ் மட்டுமன்று ; கொடுங் தமிழும், பிறமொழிகளில் மிகக் திருந்தா முரட்டு மொழியுங்கூடப் பயன்தருவனவேயாகும். இதில் பங்குகொள்ளாத மொழி இல்லை என்றே சொல்லலாம். தமிழ்த் தன்மை முன்னிலைப் பெயர்களைப் பழங்கன்னட வடிவங்களின்றி அறியமுடியாது. திராவிடத்தின் படர்க்கை ஆண்பால் பெண்பால் விகுதிகளின் அமைப்பை நன்குவிளக்க உதவும் மொழி, ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை வரிவடிவே இல்லாமலிருந்துவந்த காட்டுமொழியாகிய கந்தம் அல்லது கு மொழியே என்பது உண்மை. இங்ஙனமாயினும் மூல திராவிடத்தின் நிலைமையை உணர்த்தும்வகையில் பிறமொழிகள் அனைத்தையும் விடத் தமிழே, அதிலும் சிறப்