பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இந்தியப் புலவர்கள் அனைவரும், அவரையொட்டித் தென் இந்தியாவிலுள்ள புலவருள் ஒரு சாராரும், சமயக் கருத்துக்களைத் தெரிவிக்க வட மொழியையே ஏற்ற கருவியாகக் கொண்டு அம் மொழியில் எழுதி வந்துள்ளனர்.

'கி.மு.ஆறாம் நாற்றாண்டில் வாழ்ந்த உயர் சீர்திருத்த அறிஞரான புத்தர் தம் கோட்பாடுகளைப் பரப்ப மக்களது பேச்சு மொழியையே வழங்கலானர். அவர் தம் மாணாக்கர்கள் கணக்கு வழக்கின்றி நூல்களை எழுதித் தள்ளினர். அக்காலப் பேச்சு மொழி பாகதம். அப் பேச்சு மொழியில் எழுதிய இவர்களும் மேலே குறிப்பிட்ட குருட்டுக் கொள்கையைப் பின்பற்றினர். என்று பாகதம் புத்த சமயத்தின் இலக்கியத்துள் வழங்கிற்றோ அன்றே அதுவும் 'தெய்வ மொழி'யின் பாற்பட்டு வடமொழியின் வளர்ச்சியற்ற போக்கைப் பின்பற்றத் தொடங்கிற்று. இந்திய மொழிகளுள் எதுவும் இவ் "ஊழ் வலி" யினின்றும் தப்பவில்லை. எழுத்தில் வந்ததும் பேச்சில் செத்தது. இன்று வங்காளத்தில் இந்த நிலைமையைத்தான் பார்க்கிறோம். ஆங்கில அறிவும் பயிற்சியும் உடைய ஒரு சிலரைத் தவிர வேறெவரும் பேச்சுமொழியை எழுதுவது கொண்டு மன நிறைவடைவதில்லை. எழுதுகோலைக் கையில் எடுத்து விட்டால், "எல்லாரும் பேசுவதையா எழுதுவது? பிறர் மலைக்கும்படியான பகட்டும் உருட்டும் மிக்க வடமொழி வண்டவாளங்கள்தான் எழுதத் தக்கவை" யென்னும் நினைப்பு வந்துவிடுகிறது! (இந் நடையைப் பொது மக்கள் அறிய முடியாது என்று அவர்களே ஒப்புக் கொள்ளவும் தயங்குவதில்லை!)”

வடஇந்தியாவில் மட்டுந்தான் இந்நிலைமையென்பதில்லை; தென்இந்தியாவிலும் இதே நிலைமைதான்; இதே பயன்தான். நான்கு திருந்திய திராவிட மொழிகளுள்ளும் கிட்டத்தட்ட எல்லாமே இலக்கிய மொழி ஒருபுறமும் பேச்சுமொழி ஒருபுற