பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

151

வெட்டுக்களில் கொல்கை என்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் இன்றும் இது கொல்கா எனப்படும். இது துறை முகமாகவும் முத்துக் குளிக்குமிடமாகவும் இருக்கிறது. இதன் பெயரால் மன்னார் குடாவையே கிரேக்கர் கொல்கிக் குடா என்றழைத்தனர். பொருநையின் மணலால் இதன் கடற்கரை தார்ந்து இஃது உள்நாட்டில் சென்றபின் காயல் என்னுமிடம் துறையாயிற்று. இதுவே மார்க்கோ போலோவின் கயேல்[1] ஆகும். இக் காயலும் கடலினின்றும் விலகிய பின்தான் போர்த்துகேசியர் தூத்துக்குடி என்னும் சிற்றூரைத் துறைமுகமாக்கினர். கொற்கை என்னும் பெயர் கொல்கை அல்லது கொல்கிற கை ஆகும். தமிழில் கொல்கை என்பது படைக்கும், படைவீட்டிற்கும் இடக்கரடக்கற் பெயர் ஆம். தமிழர் அரசியன்முறை தோன்றிய இடம் இதுவே எனக் கொள்ளப்படுகிறது.

(18) கோரு: இது கோடி என்னும் தமிழ்ச்சொல். தனுக்கோடி என்றும் இது தமிழிற் கூறப்படும். ”இராமனது வில்” என்பதுவே தனு ஆகும். இங்குக் குறிக்கப்பட்டது இராமேச்சுரமே.

(19) கல்லிகிகொன்[2] என்பது இராமேச்சுரம் என்பர் சிலர். அதன் எதிர்க்கோடியாகிய கள்ளிமேடே[3] இது வாகும்.

(20) கோலிஸ், கோரு: இரண்டும் இராமேச்சுரம் அல்லது கோடியின் பெயர்கள். கோடி என்னும் வடசொல் தமிழில் கோழி என்றிருந்தது என்று இது காட்டும். வட சொல் டகரம் ழகரமானதற்கு, திராவிடம் தமிழ் ஆனது ஒர் எடுத்துக்காட்டு எனக் கூறியுள்ளோம்.

(21) மல்லி அல்லது மலய (மலை)-இது கலிங்கத்தின் வடக்கிலிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது கஞ்சத்


  1. Cael
  2. Kalligikon
  3. Point Calymer