பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கo. பண்டைத் திராவிடர்களுக்கும்,ஆரியர்களுக்கும் வடஇந்தியப் பழங்குடிகளுக்கு மிடையே இருந்த அரசியல் வாழ்வியல் தொடர்புகள்

 திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்தது ஆரியர் வருகைக்கு முன்னரே யாதல்வேண்டும். ஆனல், ஆரியர் வருகைக் காலத்தில், வடஇந்தியாவில் வாழ்ந்துவந்து வடஇந்திய மொழிகளில் ஆரியமல்லாத பகுதியைப் புகுத்த உதவிய பழங்குடிகளும் கிராவிடர்களும் ஒரே யினத்தவரா, அன்றித் திராவிடர்கள் அப் பழங்குடியினரினும் வேறுபட்ட மூத்த பழங்குடியினரா என்பதை அறுதியிட்டுக் கூறுதல் எளிதன்று. ஆரியர்கள் வருகையை முதற்கண் எதிர்த்துப் பின் அவர்களுக்குத் தோற்றுக் கீழ்ப்படிந்து அவர்களுடைய அடிமைகளும் பணியாட்களுமாக மாறிய தஸ்யூக்கள் (தாஸர்கள்) என்போரின் இனத்தைச் சேர்ந்தவர்களா கிராவிடர்கள்? அன்றி, முதற்கண் வந்த ஆரியர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களாய் அவர்கள் வருகைக்குமுன் வடஇந்தியப் பகுதியை நீத்தோ அன்றி அதனின்றுந் துரத்தப்பட்டோ தென்னிக்கியாவிற் குடியேறிய ஒரு பண்டைப் பழங்குடி மக்களா? கிராவிடர்களுக்கும், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்தியப் பழங்குடிகளுக்கு மிடையேயுள்ள இத்தொடர்பு மிகவும் சிக்கலானது. வடமொழிக்கும், பாகதமொழிகளுக்கும், வடஇந்திய மொழிகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளைத் துருவித்துருவி ஆராய்வதனால் இச் சிக்கலான கேள்விக்கு ஒருவாறு விடைகாணலாம். எனினும், கிராவிடர்களை இந்தியாவின் பண்டைப் பழங்குடியினர் என்றோ, வடமேற்குக் கணவாய்களின் வழியாக இந்தியா