பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



குறைந்த உருவினர்களே ; ஏனைய இனத்தினரை நோக்க இவர்களைக் குள்ளர்கள் என்றே கூறலாம். நிறமோ திர்ந்த கறுப்பில்லா விட்டாலும் கறுப்பென்றுதான் கூறல்வேண்டும். இவர்களுடைய தலைமயிர் கறுத்துச் செழித்துவளர்ந்து சுருளும் பண்புடையது. கரிய கண்கள் ; நீண்ட தலை ; மூக்கோ முனையகன்றும், அடிப்பகுதி சிறுபான்மை எடுப்பில்லாது தட்டையாகவும் இருக்கும் ; முன்னங்கைகள் சற்று நீண்டனவாகவே யிருக்கும்.

இந்தியாவிலுள்ள மற்றெக் குழுவினரையும் நோக்க, இக்குழுவினரே தொன்மை மிகுந்த பழங்குடிகள் என்று அறியக் கிடக்கின்றது. நிலநூலார்[1] மிகவுந் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறும் மலைப்பகுதிகளிலும், மேடான நிலப்பகுதிகளிலும், மற்றும் விந்தியமலை முதல் கன்னியாகுமரி வரையிற் பரந்து கிடக்கும் நிலப்பகுதியிற் பற்பல விடங்களிலும் இக் குழுவினர் காணப்படுகின்றனர். தென்னிந்தியாவின் கீழ்க்கரை மேற்கரையாகிய இருகரைகளிலும் தொடர்ந்து வளர்ந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி, மேற்குக் தொடர்ச்சியென்ற மலைகள் இாண்டிலும் வாழ்வோரெல்லாம் திராவிடர்களே , அவ்வாறே வடக்கே அராவலி மலைகளிலும், [2] இராஜமஹால் [3] மலைநாடுகளிலும் வாழ்வோரும் திராவிடர்களேயாவர். இடையிடை நேர்ந்த ஆரியர்கலப்பினுலும், மங்கோலியர்கலப்பினுலும், இக் குழுவினர் தம் குழுச் சிறப்பியல்புகளிற் பலவற்றை இக்காலை யிழந்திருக் கின்றனர்; எனினும் ஆராயப்புகுவோரால் எளிதில் வேறு பிரித்துக் காணக்கூடிய சிறப்பியல்புகள் வாய்ந்தவர்களாகவே இன்னும் இருக்கின்றனர்.

திராவிடர்கள் என்றால் உழைப்பாளிகள் அல்லது தொழிலாளிகள் என்றே பொருள் கொள்ளலாம் ; என்ன ?


  1. 1. Geologists.
  2. 2. •Aravallis.
  3. 3. Rajmahal.