பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடப் பெருங்குழு

179

மெய் வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டி, வாழ்வது அவர்களுக்கே சிறப்பாக உரித்தாகலின். வடகோடியிலுள்ள அஸ்ஸாம்[1] நாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் மாக்களைப் போல் உழைக்க வேண்டுமானலுஞ் சரி ; வங்காளத்தைச் சேர்ந்த சதுப்பு நிலங்களில் [2] மாடுபோலுழைத்துச் சாகுபடி செய்ய வேண்டுமானலுஞ் சரி ; கல்கத்தா, இரங்கோன், சிங்கப்பூர் போன்ற தலைநகரங்களில் தெருப்பெருக்கிக்[3] குப்பை கொட்ட வேண்டுமானலுஞ்சரி; மற்றித்தகைய உடல் வருத்தும் கீழ்த்தாமான வேலைகள் எவையாயினுஞ்சரியே, அவற்றிற் கெல்லாம் ஈடுகொடுத்துப் பாடுபடுபவர்கள் திராவிடர்களே. கரிய நிறம் வாய்ந்து, திண்ணிய உடற்கட்டுடனும், தட்டையா யகன்று நீக்ரோவர்தம் [4] மூக்குகளை யொத்த மூக்குகளோடுங் காணப்பட்டு மெய்வருந்திப் பாடுபடுவதே தொழிலாகக் கொண்டு வந்திருந்தவர்களெல்லாம் திராவிடர்களே என்று எளிதிற் கூறிவிடலாம்.

குழுவரையறை துணிதலியலாது

குழுவின ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டு மேற்பிரித்துக் காட்டியவாறு ஏழு இனத்தினராகவோ அதற்குக் கூடுதற்குறைவான தொகையுள்ள இனத்தினராகவோ பிரித்தும், இந்தியம் பெருநாட்டின் இன்னின்ன பகுதிகளில் இன்னின்ன இனத்தார்தான் வாழ்ந்துவந்தனர் என்று வரையறுத்துங் கூறுதல் என்பது இயலாது. சென்னைப் பகுதியிலுள்ளவர்களெல்லாம் திராவிடர்களென்ருே, அன்றி, வங்காளத்திலுள்ளவர்க ளெல்லாம் மங்கோலியத் திராவிடர்களென்றே நூல் பிடித்ததுபோல் வகுத்துக் கூறிவிடத்துணிதல் அறியாமையேயாகும். பண்டு தொட்டே இந்திய நாட்டின் வடபகுதியிலிருப்போர் தென்பகுதிக்கும், மேலைப் பகு-


  1. Assam.
  2. Swamps.
  3. Scavenging.
  4. Negroes