பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடப் பெருங்குழுவியல்பு

185

இனத்தாரின் தொன்மைநலங் கெடாத நிலையைக் காண வேண்டின் சோட்டாநாகபுரியிலுள்ள திராவிடக் குழுவினரைக் தான் நோக்கவேண்டும். அவர்கள் பல இனங்கள் ஒன்றுசேர்ந்த குழுவினர். ஒவ்வோரினத்தையுஞ் சேர்ந்த பல குலங்களில் ஒவ்வொன்றற்கும் பெரும்பாலும் ஒரு செடி அல்லது விலங்கின் பெயரேதான் குலப்பெயராக விருக்கும். ஒவ்வொரு குலத்தினருக்கும், அவர்களுக்கென்று ஏற்பட்ட தனியான நாட்டாண்மைக் கழக மொன்றிருக்கும்; அக்கழகத் தலைவகை நாட்டாண்மைக்கார னொருவனிருப்பான்; அவனுக் குதவிபுரிய ஒரு சின்ன நாட்டாண்மைக் காரனும், ஊர்ப் பெரிய பூசாரி யொருவனும், ஏனைச் சிறு தெய்வங்களுக்குப் பலியிட்டுப் படைப்பதற்கென வமர்த்தப்பட்ட சிறு பூசாரிகள் பலரு மிருப்பார்கள்.

இனி, ஒரிஸாவிலுள்ள[1] கந்தர்கள்[2] திராவிடக் குழுவைச் சேர்ந்தவர்களே. நிலம் நன்கு விளைந்து பலனளிக்கவும், ஊர்மக்கள் நோய்வாய்ப் படாமலிருக்கவும் வேண்டி ஒருகாலத்தில் அவர்கள் நிலமகளுக்கு மக்களையே வெட்டிப் பொங்கலிட்டு (நரபலி) வந்ததுண்டு. இக் கந்தர்கள் ஐம்பது கொச்சி[3] அல்லது குலத்தவர்கள். ஒவ்வொரு கொச்சியும் ஒரு முற்றம்[4] அல்லது சிற்றுாரின் பெயரைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு குலத்க வரும் தாங்க ளெல்லோரும் ஒரே மூதாதையின் வழிவந்தவர்களென்று கூறிக் கொள்வார்கள்; இயன்றவரையில் தத்தங் குலப்பெயருடைய சிற்றூரிலேயே இருந்து வாழ்ந்துவருவார்கள்.

நாமலைகளில் [5] வசிக்கும் மங்கோலாய்ட் இனத்தவர்களும் கந்தர்களைப் போன்று பல குலங்களைக் கொண்டவர்களே. அவர்கள் மொழியிற் குலப்பிரிவு ஒவ்வொன்றற்கும்


  1. 1. Orissa.
  2. 2. Khonds.
  3. 3. Gochi.
  4. 4. Mụta.
  5. 5. Naga Hills.