பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் போலன்றித் திராவிட மொழிகள் இடைச் சொற்களைப் பயன் படுத்துவதினும், சாரியை, உருபு முதலியவற்றையே பெருவாரியாகப் பயன்படுத்துகின்றன. திராவிட மொழிகளிலுள்ள வினைச் சொற்களுக்கும் உடன்பாடு, எதிர்மறை யென்ற இரண்டும் உண்டு. சொற் ருெடர்களைவிடக் குறிப்புப் பெயரெச்சங்களையே திராவிட மொழிகள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன.’’