பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



வினர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இம்மொழி யினத்தைக் குறித்த புள்ளிவிவாங்கள் பின்வருவனவாம்:-

பேசுவோர் தொகை

(1901-ஆம் ஆண்டு)

கேர்வாரி[1]
2,784,395
கூர்க்க[2]
87,675
கறியா[3]
101,986
ஜுவாங்[4]
10,853
சவரா[5]
157,136
கடபா[6]
37,230
மொத்தம்
3,179,275


இம் மொழியினத்துள் தலையாயது கேர்வாரியே; இதனைச் சேர்ந்த வரிவடிவில்லாக் கிளைமொழிகள் பலவுள; அவை இதனின் வேறுபட்டனவெனக் கருதுவோரு முளர்.

கேர்வாரி:

சங்காளீ[7] என்ற ஆர்[8], முண்டாரி[9], புமிஜ்[10], பிரார்[11], கோடா[12], ஒ[13], தூரி[14], அசூரி[15], அகரியா[16], கொர்வா[17] என்பன அக்கிளை மொழிகளே. இவற்றுள் சந்தாளி, முண்டாரி என்ற இரண்டும் இலக்கண அமைப்பு வாய்ந்தவை. சந்தாளி மொழிக்கு அகராதி யொன்று முண்டு. சிங்கபூமியைச்[18] சேர்ந்த லர்க்கா[19] என்னும் ”போர்க்” கோலர்கள்[20] பேசும் மொழி ஓ என்பதாம். சந்தாளி பயிலுமிடம் சந்தாள பரகணாக்கள்[21]


  1. Kherwari
  2. Kurku
  3. Kharia
  4. Juang
  5. Savara
  6. Gadaba
  7. Santali
  8. Har
  9. Mundari
  10. Bhumij
  11. Birhar
  12. Koda
  13. Ho
  14. Turi
  15. Asuri
  16. Agaria
  17. Korwa
  18. Singhbhumi
  19. Larka
  20. Fighting Kols
  21. Santal Parganas