பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

3

லாயினர். ஆயினும் இவர்களெல்லோரும் பண்டு ஒரே கிளையினாாக இருந்தவர்களே யென்றும், அவர்களுடைய மொழி ஒருகாலக்கில் வடமொழியா யிருந்திருக்கக் கூடும் என்றுங் கூறலாம். இது நிற்க.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்கானியர்களும் பட்டானியர்களும், ஏனைய வடஇந்திய முகம்மதியர்களும் தென்னிந்தியப் பகுதிகளில் வந்து குடியேறினர். அவர்கள் பேசிய தனிப்பட்ட மொழி இந்துஸ்தானியாகும். இன்றும் ஐதாராபாக்கப் பகுதியில் இந்துஸ்தானி உண்ணுட்டு மொழியாகவே வழங்கிவருகின்றது. ஆனால், தென்னிந்தியப் பகுதியிலோ, முகம்மதியர்களுள் உயர்க வாழ்க்கை யுள்ளவர்கள் தவிர்ந்த நடுத்தர வாழ்க்கையினரும், ஏழை எளியவர்களும் எவ்வளவுக்குத் தம் இனமொழியாகிய இந்துஸ்தானியை வழங்கிவருகிறார்களோ அவ்வளவுக்கு உண்ணாட்டு மொழிகளையும் பேசிவருகிறார்கள். அகிலும், லப்பைகள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படும் தென்னிந்திய முகம்மதியர்களுக்கு "இந்துஸ்தானி" எப்பொழுதுந் தாய்மொழியாக இருந்ததில்லை. இந்த "லப்பைகள்" கிழக்கிந்தியக் கரையோரங்களிலுள்ள இந்திய மக்களால் சோனகர்கள் (யவனர்கள்) என்றும் மேற்கிந்தியக்கரையோரங்களிலுள்ள மக்களால் மாப்பிள்ளைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களெல்லோரும் அராபிய வணிகர்களையும் அவர்களால் மதமாற்றிச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களையுஞ் சேர்ந்தவர்கள்;தமிழோ மலையாளமோ பேசுபவர்கள்.

கொச்சியிலும் அதன் சுற்றுவட்டங்களிலுமுள்ள யூதர்களால் [1]எபிரேயம் என்ற மொழி பேசப்பட்டுவருகிறது ; பார்ப்பனர்களால் எந்த அளவுக்கு, எவ்வெக்காரியங்கட்கு வடமொழி கையாளப்பட்டு வருகிறதோ, அந்த அளவுக்கு


  1. Hebrew