பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முண்டா மொழிகள்

201

என்ற பகுதியே யெனினும், இன்னும் தெற்கே நெடுந் தொலைக்கு, அஃதாவது, வங்காள மேலெல்லை யோரமாக வடஒரிஸ்ஸா வரை அது பயின்றுவருகிறது. ஏனைய மொழிகளெல்லாம் சோட்டாநாகபுரியிலும், அதனை யடுத்த ஒரிஸ்ஸா நாட்டு மலைப்பகுதிகளிலும், மத்திய மண்டிலத்திலும் பயின்று வருகின்றன.

கூர்க்கூ:

கூர்க்கூ என்னும் முண்டாமொழிவகை மகாதேவ மலைப் பகுதிகளில் வழங்கி வருகின்றது. கறியா, ஜுவாங் என்ற இரண்டினோடுஞ் சேர்ந்து இஃதொரு தனிப்பட்ட மொழி வகையாகக் கருதப்பட்டுவரினும், கேர்வாரியுடன் ஏனைய இரண்டையும் நோக்க, இதுவே பெரிதுந் தொடர்புடைய தாய்க் காணப்படுகிறது. இம் மொழியும் ஒருவாறு திருத்த முற்றதொன்றே. இதற்கு இலக்கண அமைப்பும் உண்டு.

கறியா:

இாாஞ்சியின்[1] தென்மேற்குப் பகுதியிலும் அதனை யடுத்த ஜஷ்பூர்[2], காங்பூர்ப்[3] பகுதிகளிலும் இம்மொழி பயின்று வருகின்றது. இம் மொழி பேசும் குழுவினர் இன்னுந் தெற்கே பரவி வாழ்ந்துவந்துள்ளவராகக் காணப்படினும், கறியாவாகிய தம்மொழி பேசுவதை விடுத்துத் திராவிட மொழியினத்தைச் சேர்ந்த குறுக்கம் என்பதனையோ, அன்றி, வடமொழிச் சிதைவுகளையோ அவர்கள் ஆங்காங்குப் பேசிப் பழகிவருகின்றார்கள். அதனால் இம்மொழி சிறிது சிறிதாக இறந்துபட்டுவருகின்றது.

ஜுவாங்:

ஜுவாங் என்பதும் ஏறக்குறைய கறியாவைப் போன்றதேதான். ஒரிஸ்ஸா நாட்டு மலைப்பகுதிகளிலுள்ள ஒரு


  1. Ranchi
  2. Jashpur
  3. Gangpur